தொழில்நுட்பம்
ட்விட்டர்

ட்விட்டர் அதகளம் - 17 வயது நபர் அதிரடி கைது

Published On 2020-08-01 08:09 GMT   |   Update On 2020-08-01 08:09 GMT
ட்விட்டர் தளத்தில் பிரபலங்களின் அக்கவுண்ட்களை ஹேக் செய்த நபர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.


உலகில் குறுந்தகவல்களை பதிவிடுவதற்காக ட்விட்டர் சமூக வலைத்தளம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வரையில் அரசியல், விளையாட்டு, சினிமா, தொழில், வர்த்தகம் என பல துறை பிரபலங்களும் ட்விட்டர் கணக்குகளை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பிரபலங்களான பில் கேட்ஸ், எலான் மஸ்க், ஜெஃப் பெசோஸ், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமா, வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக களம் இறங்கும் ஜோ பிடன், பாடகர் கன்யே வெஸ்ட் உள்ளிட்டவர்களின் ட்விட்டர் கணக்குகள் இந்த மாத துவக்கத்தில் ஹேக் செய்யப்பட்டன.

ட்விட்டர் கணக்குகள் சட்டவிரோதமாக ஹேக் செய்யப்பட்ட சம்பம் உறுதியானதும் இந்த செயலில் ஈடுபட்ட நபர்களின் செயல்களை கட்டுப்படுத்த உடனடியாக அந்த நிறுவனத்தின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.



இந்த ஹேக்கிங் ரஷியா அல்லது சீனாவால் நடைபெற்றிருக்கலாம் என அமெரிக்கா சந்தேகம் எழுப்பியது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்றுவந்தது. இந்த விசாரணையில் பிரபலங்களை ஹேக் செய்து அதில் பிட்காய்ன் தொடர்பான தகவல்களை வெளியிட்டது. 3 பேர் கொண்ட இளைஞர்கள் குழு என தெரியவந்தது.

புளோரிடாவை சேர்ந்த நிமா பாசீல் (22), இங்கிலாந்தை சேர்ந்த ஷேப்பர்டு (19) ஆகிய இருவரும் டுவிட்டர் ஹேக்கிங்கில் ஈடுபட்டுள்ளனர். மூன்றாவது நபரான 17 வயது நிரம்பிய சிறுவன் தான் இந்த ஹேக்கிங்கில் மூளையாக செயல்பட்டுள்ளாதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

கிராகாம் கிளார் என்ற பெயருடைய 17 வயது சிறுவன் தான் இந்த மிகப்பெரிய ஹேக்கிங்கின் முக்கிய காரணம் என தெரியவந்ததை தொடர்ந்து அவர்கள் அனைவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இவர்கள் அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு ஹேக்கிங் செய்ய காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News