லைஃப்ஸ்டைல்
கலம்காரி புடவைகள்

அழகு, மென்மை நளினம் - கலம்காரி புடவைகள்

Published On 2021-11-01 03:24 GMT   |   Update On 2021-11-01 03:24 GMT
கலம்காரி பிரிண்டட் புடவைகள் இப்பொழுது ஹாட் டிரெண்டில் உள்ள புடவையாக சொல்லலாம். வீட்டில் அன்றாடம் அணியவும், அலுவலகத்திற்கு அணிந்து செல்லவும் ஏற்றவையாக இவை உள்ளன.
கலம்காரி என்பது ‘கலாம்’ - எழுதுகோல் மற்றும் ‘காரி’- கைவினைத்திறன் என்ற இரண்டு பாரசீக வார்த்தைகள் இணைந்த ஒரு சொல்லாகும். பேனாவால் வடிவங்களை வண்ணங்களில் தீட்டி உருவாக்கப்படும் கலையே ‘கலம்காரி’.

கலம்காரி புடவைகள் இந்திய மாநிலமான ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பெருமளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதேபோல் கலம்காரி டிசைன்களை அச்சிடுவதற்கு அதிக அளவில் இயற்கை சாயங்களையே உபயோகப்படுத்துகிறார்கள்.

கலம்காரி சில்க் புடவைகள்:- கலம்காரி சில்க் புடவைகள் நேர்த்தி மற்றும் க்ளாஸாக புடவை அணியும் பெண்களுக்கு ஏற்றவை. ப்ளாக் பிரிண்ட்டுகளுடன் வரும் இவ்வகை புடவைகள் அணிபவருக்கு எளிதாகவும், வசதியாகவும் இருக்கும், அனைத்து சந்தர்ப்பங்கள் மற்றும் பார்ட்டிகளுக்கு அணிந்து செல்ல ஏற்ற புடவைகள் என்று இவற்றைச் சொல்லலாம்.

கலம்காரி காட்டன் புடவைகள்:- மதிப்புடைய காட்டன் ரகங்களில் கலம்காரி சாயமானது இடப்பட்டு அதில் அச்சுகளை புடவை முழுவதும் அல்லது புடவையின் பார்டர் மற்றும் பல்லுவில் இருப்பது போல் வடிவமைக்கிறார்கள். கையால் அச்சிடப்படும் இவ்வகைப் புடவைகள் பல்வேறு வடிவமைப்புகளுடன் அனைவராலும் வாங்கக் கூடிய விலையில் வருகின்றன. கலம்காரி டிசைன்களில் வரும் காட்டன் புடவைகளை பெரும்பாலான பெண்கள் உடுத்துவதை நாம் கண்கூடாகப் பார்க்க முடியும். இப்புடவைகள் தினசரி உடுத்திக் கொள்ள ஏற்றவை.

கலம்காரி க்ரேப் புடவைகள்:- இலகுரக புடவைகளை விரும்புபவர்களின் சரியான தேர்வு இவ்வகை க்ரேப்
புடவை
கள் மிகவும் மெல்லிய துணியால் உருவாக்கப்படும் இவை அணிபவரின் உடலில் லேசான உணர்வைத் தருகின்றன. திறமையான கைத்தறி நிபுணர்களால் இவ்வகை புடவைகளில் டிசைன்கள் அச்சிடப்படுகின்றன. அலுவலகம் செல்லும் பெண்கள் தினசரி அணிய ஏற்றவை இவை.

டிசைனர் கலம்காரி புடவைகள்:- ஆடம்பரமான தோற்றம், வாங்கக்கூடிய விலை இவையே இப்புடவைகள் அதிக அளவில் தேவையை ஏற்படுத்துவதற்குக் காரணம். பல்வேறு வடிவங்கள் மற்றும் வடிவமைப்புகளில் வரும் இவை தனித்தன்மையைக் கொண்டவையாக இருக்கின்றன. டிசைனர் கலம்காரி புடவைகள் கையால் நெய்யப்பட்ட மற்றும் கையால் அச்சிடப்பட்ட கைவினைத் திறன் சேர்ந்த கலவையாகும்.

கலம்காரி பிரிண்டட் புடவைகள்:- இப்பொழுது ஹாட் டிரெண்டில் உள்ள புடவையாக இவற்றைச் சொல்லலாம். வீட்டில் அன்றாடம் அணியவும், அலுவலகத்திற்கு அணிந்து செல்லவும் ஏற்றவையாக இவை உள்ளன.

கலம்காரி பார்டர் புடவைகள்:- உடல் முழுவதும் பிளையின் வண்ணத்தில் இருக்க புடவையின் பார்டர்கள் கலம்காரி டிசைனில் வருவது நேர்த்தியான தோற்றத்தைத் தருவதாக உள்ளது. கான்ட்ராஸ்ட் நிறங்களில் கலம்காரி பார்டர்கள் மற்றும் பல்லு இருப்பது போல் வரும் இவ்வகை புடவைகள் அருமையாக இருக்கின்றன.

கலம்காரி பட்டுப் புடவைகள்: திருமண நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்களுக்கு அணிய ஏற்ற புடவைகள் இவையாகும். ராசில்க் துணி வகைகளில் உற்பத்தி செய்யப்படும் இவ்வகை பட்டுப்
புடவை
கள் நேர்த்தியான தோற்றத்தைத் தருகின்றன. பரந்த அளவிலான பாரம்பரிய மற்றும் சமகாலப் பாணிகளுடன் வரும் இந்த பட்டுப் புடவைகள் அனைத்துப் பெண்களிடமும் இருக்க வேண்டிய ஒன்றாகும்.

கையால் வண்ணம் தீட்டப்படும் கலம்காரி புடவைகள்:- திறமையான கைவினைஞர்களால் கைகளால் வரைந்து வண்ணம் தீட்டப்படும் இவ்வகைப் புடவைகளை வாங்குவதற்கென்றே தனியான ரசிகைகள் இருக்கிறார்கள். இப்புடவைகளில் பழங்கால புராண கதைகள் மற்றும் ஓவியங்களில் வரும் படங்களை வண்ணமயமாகவும் துடிப்பாகவும் சித்தரித்து உருவாக்குகிறார்கள்.

கலம்காரி ஜியார்ஜெட் புடவைகள்:- உடலமைப்பை குறைத்துக் காட்டும் இவ்வகைப் புடவைகள் பெரும்பாலான பெண்களின் வரவேற்பை பெற்றுள்ள நவீனப் போக்கு சேலைகளாகும். இவற்றை அணிவதும், பராமரிப்பதும் எளிது.

கலம்காரி ஷிஃபான்புடவைகள்:- உடல் முழுவதும் பூக்களால் அச்சிடப்பட்டு வரும் இவ்வகை புடவைகள் அணிவதற்கு இலகுவாகவும், வாங்கக்கூடிய விலையிலும் இருக்கின்றன.

கலம்காரி பேட்ச் வொர்க் புடவைகள்:- காட்டன்
புடவைகளில் வரும் கலம்காரி பேட்ச் வொர்க் புடவைகள் அபாரமாக இருக்கின்றன. அலுவலகம் மற்றும் தினசரி பயன்பாட்டிற்கு ஏற்ற புடவைகள் இவை.

ஹாஃப் அண்டு ஹாஃப் புடவைகள்:- புத்தம் புதிய போக்கில் வந்திருக்கும் இவை ஹாஃப் சேரி மாடலில் இருக்கின்றன. தனித்துவமான வடிவமைப்புடன் வரும் இவை பெண்களின் இளவயதில் பாவாடைத் தாவணி அணிந்த நாட்களை ஞாபகப்படுத்தும் விதத்தில் உள்ளன.

சந்தேரி கலம்காரி புடவைகள்:- சந்தேரி காட்டன் சில்க் காட்டன் மற்றும் ப்யூர்சில்க் துணிகளில் இப்புடவைகள் தயாரிக்கப்படுகின்றன. இவ்வகைப் புடவைகளை அணியும்பொழுது கௌரவமான தோற்றம் ஏற்படுவதால் பெண்களுக்கு பிடித்த புடவைகளில் முதன்மையான இடத்தை இவை பெற்றிருக்கின்றன.

இவை மட்டுமல்லாது பெத்தண்ணா (ஆந்திரா) கலம்காரி புடவைகள், கேரளா கலம்காரி புடவைகள் என கலம்காரி புடவைகளில் ஏராளமான வகைகள் உள்ளன. பிளெயின் புடவைகளுக்கு கலம்காரி பிளவுஸ்களை அணியும் பொழுது அவை மிகவும் துடிப்பாகவும், கவர்ச்சியாகவும் இருக்கின்றது. அதேபோல், பளிச்சென்றிருக்கும் கலம்காரி புடவைகளுக்கு கான்ட்ராஸ்ட் புரோகேட் பிளவுஸ்களை அணியும் பொழுது அவை அழகுக்கு அழகு சேர்க்கும் விதமாக உள்ளன. கலம்காரி புடவைகளுக்கு கான்ட்ராஸ்ட் பூக்கள் பிரிண்ட் செய்யப்பட்ட பிளவுஸ்களை அணிவதும் இன்றைய போக்காக உள்ளது.

Tags:    

Similar News