செய்திகள்
கோப்புப்படம்

ஜெர்மனியில் அடுத்த ஆண்டின் முதல் சில மாதங்கள் கொரோனா கட்டுப்பாடுகள் நீடிக்கும்

Published On 2020-11-29 01:27 GMT   |   Update On 2020-11-29 02:28 GMT
கொரோனாவுக்கு எதிரான கட்டுப்பாடுகள் அடுத்த ஆண்டின் முதல் சில மாதங்கள் வரை அமலில் இருக்கும் என ஜெர்மனி அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெர்லின்:

கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஜெர்மனியும் ஒன்று. அங்கு வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்து சென்றுகொண்டிருக்கிறது. அங்கு வைரஸ் பரவலின் வேகம் தீவிரமாக இருப்பதால் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தநிலையில் கொரோனாவுக்கு எதிரான இந்த கட்டுப்பாடுகள் அடுத்த ஆண்டின் முதல் சில மாதங்கள் வரை அமலில் இருக்கும் என ஜெர்மனி அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டின் பொருளாதாரம் மற்றும் எரிசக்தி துறை மந்திரி பீட்டர் ஆல்ட்மேயர் கூறுகையில் “ஜெர்மனியில் 1 லட்சம் மக்களில் 50 பேருக்கு வைரஸ் தொற்று என்கிற விகிதம் இருக்கும் வரை நம்மால் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது. எனவே துரதிருஷ்டவசமாக கட்டுப்பாடுகளை ரத்து செய்ய முடியாது. 2021-ம் ஆண்டின் முதல் சில மாதங்களில் கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும்” என்றார்.
Tags:    

Similar News