செய்திகள்
ஆட்டுக்கொட்டகையை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தபோது எடுத்த படம்.

வெண்ணந்தூர் பகுதியில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு

Published On 2021-01-11 05:12 GMT   |   Update On 2021-01-11 05:12 GMT
வெண்ணந்தூர் பகுதியில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் மெகராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வெண்ணந்தூர்:

வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் மெகராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம் அலவாய்ப்பட்டி ஊராட்சியில் ரூ.7.75 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி முதல் அம்மா பூங்கா வழியாக அண்ணா நகர் வரை 200 மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்ட தார்சாலையையும், அலவாய்ப்பட்டியில் ரூ.12.36 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் உணவு சேமிப்பு கிடங்கினையும் கலெக்டர் பார்வையிட்டார்.

பொன்பரப்பிபட்டியில் அத்தாயி என்ற பயனாளியின் நிலத்தில் ரூ.2.27 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள ஆட்டுக்கொட்டகையையும், ராஜாமணி என்பவரது நிலத்தில் ரூ.1.35 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மாட்டுக் கொட்டகையையும் கலெக்டர் பார்வையிட்டு, சரியான முறையில் கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளனவா? தரமான பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனவா? என்று அளந்து பார்த்து உறுதி செய்தார்.

மேலும் ரூ.1.19 லட்சம் மதிப்பீட்டில் பொன்பரப்பிபட்டியில் நடப்பட்டுள்ள மரக்கன்றுகள் நன்கு வளர்ந்திருப்பதையும் கலெக்டர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வுகளின்போது வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் பாஸ்கர், வனிதா மற்றும் உதவி வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News