ஆன்மிகம்
விஷ்ணுவின் தசாவதாரங்கள்

விஷ்ணுவின் தசாவதாரங்கள்

Published On 2020-12-19 06:13 GMT   |   Update On 2020-12-19 06:13 GMT
உலகத்தில் அறம் வெல்ல வேண்டும், தர்மம் செழிக்க வேண்டும், புண்ணியம் அதிகரிக்க வேண்டுமென்று விஷ்ணு பகவான் ஒவ்வொரு அவதாரமாக எடுத்து உலகில் அனைவரும் நலமோடு வாழ வழிகாட்டினார்.
உலகத்தில் அறம் வெல்ல வேண்டும், தர்மம் செழிக்க வேண்டும், புண்ணியம் அதிகரிக்க வேண்டுமென்று விஷ்ணு பகவான் ஒவ்வொரு அவதாரமாக எடுத்து உலகில் அனைவரும் நலமோடு வாழ வழிகாட்டினார். பெருமாளின் பத்து அவதாரங்களையும் ‘தசாவதாரம்’ என்று நாம் சொல்கின்றோம். அந்த அவதாரங்கள் குறித்து காண்போம்.

மச்சாவதாரம்

ஹயக்ரீவன் என்ற அசுரன் வேதங்களைத் திருடிச்சென்று கடலின் அடியில் ஒளித்து வைத்திருந்தான். திருமால் ‘மச்சாவதாரம்’ எடுத்து ஹயக்ரீவன் என்ற அசுரனிடம் போராடி வேதங் களை மீட்டெடுத்து வந்தார்.

கூர்மாவதாரம்

தேவர்கள் பாற்கடலைக் கடை யும் பொழுது திருமாலின் உதவியை நாடினார்கள். அப்பொழுது மலை சாய்ந்து விடாமல் இருப்பதற்காக திருமால் ஆமை வடிவம் எடுத்து அமிர்தம் கடைய உதவினார்.

வராகவதாரம்

ஹிரண்யாட்சகன் என்ற அசு ரன் பூமியை எடுத்துக்கொண்டு கடலுக்கடியில் ஒளிந்து கொண் டான். திருமால் அங்கு சென்று, அவனோடு போராடி, பூமியைத் தன்னுடைய கொம்பில் தாங்கியபடி வெளியே வந்தார். அப்போது, திருமால் எடுத்த அவதாரம் தான் ‘வராகவதாரம்’.

நரசிம்மவதாரம்

இரணியன் என்ற அசுரன் மனிதர்களாலும், தேவர்களாலும், விலங்குகளாலும் தனக்கு மர ணம் சம்பவிக்கக்கூடாது என்று வரம் கேட்டான். இரவிலும் சாகக்கூடாது, பகலிலும் சாகக்கூடாது. வெளியிலும் சாகக்கூடாது, வீட்டிலும் சாகக்கூடாது. எந்த ஆயுதங்களாலும் தாக்கப்படக்கூடாது என்று வரம் கேட்டான். அவனுக்கு கொடுத்த வரத்தை நிரூபிக்கும் விதத்தில் அந்தி நேரத்தில் தூணில் இருந்து வெளிப்பட்டு நரசிம்ம உருவத்தில் (மனிதன் மற்றும் விலங்கு), படியில் அமர்ந்து, நகத்தினாலேயே வதம் செய்து, வெற்றி பெற்ற அவதாரம் ‘நரசிம்மவதாரம்’.

வாமனாவதாரம்

மகாபலிச் சக்கரவர்த்தி கேட்ட வரத்தின் பேரில் தேவர்கள் நிம்மதி இழந்ததால் திருமால் குள்ளமான உருவம் எடுத்து அவனிடம் மூன்றடி மண் கேட்டார். முதல் அடியால் பூலோகத்தை அளந்தார். அடுத்த அடியால் வான் உலகத்தை அளந்தார். மூன்றாவது அடியால் மகாபலிச் சக்கரவர்த்தியின் தலையில் கால் வைத்து அவரைப் பாதாளத்திற்கு அழுத்தினார்.

பரசுராமவதாரம்

பரசு என்ற ஆயுதத்தைத் தாங்கிய திருமாலின் அவதாரம், பரசுராமவதாரம் என்று அழைக்கப்படுகின்றது. பரசுராமர் தன் தந்தையைக் கொன்ற அரச வம்சத்தை அழிப்பதற்காக சபதம் பூண்டு அதை நிறைவேற்றிய அவதாரம் தான் பரசுராம அவதாரமாகும்.

ராமாவதாரம்

தசரத மன்னனின் மகனாகத் திருமால் எடுத்தது ‘ராமாவதாரம்’. ‘ஒரு வில்’, ‘ஒரு இல்’, ‘ஒரு சொல்’ என்று வாழ்ந்து காட்டிய அவதாரம் இது. ராவண வதம் இந்த அவதாரத்தால் நிகழ்ந்தது.

பலராமவதாரம்

கண்ணனுக்கு அண்ணனாகத் தோன்றியவர் பலராமன். கண்ணன் சிறுவனாக இருந்தபோது அவர்களின் பகைவர்களை அழிப்பதற்கு உதவிய அவதாரம் இது.

கிருஷ்ணாவதாரம்

வசுதேவருக்கும், தேவகிக்கும் எட்டாவது பிள்ளையாகத் தோன்றியவர். ஆவணி, ரோகிணி, அஷ்டமியில் அவதரித்தவர், ஹம்சனை அழித்து பூமாதேவியின் பாரத்தைக் குறைத்தவர். மகாபாரத யுத்தத்தின் போது பஞ்ச பாண்டவர்களுக்குத் துணையாக இருந்தவர் கிருஷ்ணர்.

இனி, கலியுகத்தின் முடிவில் எடுக்கவுள்ள அவதாரம் கல்கி அவதாரம் என்பர்.

-‘ஜோதிடக்கலைமணி’ சிவல்புரி சிங்காரம்
Tags:    

Similar News