உள்ளூர் செய்திகள்
கவாத்து பயிற்சியின் நிறைவு விழாவில் போலீஸ் கமிஷனர் சந்தோஷ்குமார் ஆய்வு செய்த காட்சி.

நெல்லை ஆயுதப்படையில் போலீசாருக்கு வருடாந்திர கவாத்து பயிற்சி

Published On 2022-05-05 10:36 GMT   |   Update On 2022-05-05 10:36 GMT
பாளை ஆயுதப்படை மைதானத்தில் போலீசாருக்கு வருடாந்திர கவாத்து பயிற்சி நடைபெற்றது.
நெல்லை:

பாளை ஆயுதப்படை மைதானத்தில் ஆண்டுதோறும் போலீசாருக்கு கவாத்து பயிற்சி வழங்கப்படும். இந்த ஆண்டுக்கான கவாத்து பயிற்சி கடந்த மாதம் 18-ந்தேதி தொடங்கியது. இந்த பயிற்சியில் சுமார் 420 பேர் பங்கேற்றனர். 

இதில் காவலர்களுக்கு உடல் திறன் ஆயுதங்களை கையாள்வது, கலவரங்களை, கூட்டங்களை தடுப்பது, முக்கிய பிரமுகர் பாதுகாப்பு மற்றும் யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
பயிற்சி இன்றுடன் முடிவடைகிறது. 

நிறைவு விழாவையொட்டி வருடாந்திர கவாத்து அணிவகுப்பு நடைபெற்றது. இந்த அணிவகுப்பை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் குமார் ஆய்வு செய்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.தொடர்ந்து மாநகர போலீசாருக்கான வாகனங்களையும் கமிஷனர் ஆய்வு செய்தார். 

ஆய்வின்போது மாநகர கிழக்கு மண்டல போலீஸ் துணை கமிஷனர் டி.பி. சுரேஷ்குமார், நெல்லை மாநகர நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனர் நாகசங்கர், நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் பிறைச்சந்திரன்,  ஆயுதப்படை உதவி கமிஷனர் முத்தரசு, ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் டேனியல், மோட்டார் வாகனபிரிவு இன்ஸ்பெக்டர் ராணி ஆகியோர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News