ஆன்மிகம்
தேய்பிறை அஷ்டமியையொட்டி காலபைரவருக்கு சிறப்பு பூஜை

தேய்பிறை அஷ்டமியையொட்டி காலபைரவருக்கு சிறப்பு பூஜை

Published On 2020-09-11 05:52 GMT   |   Update On 2020-09-11 05:52 GMT
பரமத்தி வேலூர் அருகே பாண்டமங்கலத்தில் உள்ள புதிய காசி விஸ்வநாதர் கோவிலில் காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமியையொட்டி பால், தயிர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடந்தது.
பரமத்தி வேலூர் அருகே பாண்டமங்கலத்தில் உள்ள புதிய காசி விஸ்வநாதர் கோவிலில் காலபைரவர் சன்னதி உள்ளது. இங்கு தேய்பிறை அஷ்டமியையொட்டி நேற்று காலபைரவருக்கு பால், தயிர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடந்தது. அதனைத்தொடர்ந்து தீபாராதனை, பூஜைகள் செய்யப்பட்டு, காலபைரவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும் பெண்கள் சுரைக்காயில் தீபம் ஏற்றி காலபைரவரை வழிபட்டனர்.

இதேபோல் மாவுரெட்டி பீமேஷ்வரர் கோவில், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர் கோவிலிலும் தேய்பிறை அஷ்டமியையொட்டி கால பைரவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதில் பக்தர்கள் முக கவசம், சமூக இடைவெளியை கடைப்பிடித்து கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News