வழிபாடு
ஐயப்ப சுவாமிகள் கூட்டு பஜனை நடத்தும் முறை

ஐயப்ப சுவாமிகள் கூட்டு பஜனை நடத்தும் முறை

Published On 2021-12-07 05:57 GMT   |   Update On 2021-12-07 08:35 GMT
சபரிமலை செல்லும் பக்தர்கள் கூட்டு பஜனை நடத்த வேண்டும். கூட்டு பஜனையை எப்படி நடத்த வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
சபரிமலை செல்லும் பக்தர்கள் கூட்டு பஜனை நடத்த வேண்டும். கூட்டு பஜனையை எப்படி நடத்த வேண்டும் தெரியுமா?

முதலில் மஞ்சள் பொடி கொண்டு மஞ்சள் பிள்ளையார் ஒன்று செய்து வைத்து வணங்க வேண்டும். குருசாமியும் மற்ற சாமிகளும் விநாயகர் முதற்கொண்டு மற்ற கடவுள்களை மனதில் வணங்கி பின்னர் ஒவ்வொருவராக சரண கோஷம் எழுப்ப வேண்டும்.

விநாயகர், முருகன், சக்தி, சிவன், விஷ்ணு என்ற வரிசையில் ஆரம்பித்து பிறகு ஐயப்பன் மீது பாடல்கள் பாட வேண்டும். பாடல்கள் பாடி முடித்ததும் தேங்காய் உடைத்து நீர் தெளித்து தீபம் காட்ட வேண்டும். பிறகு 18 படிகள் இருந்தால் அதிலோ அல்லது வாழை இலையின் இருபக்கங்களிலும் பக்கத்திற்கு 9 வீதம் வாழைப்பழத்துண்டுகளை நறுக்கி வைத்து அதில் கற்பூரத்தை வைத்து படிப்பாட்டு பாட தொடங்க வேண்டும்.

படிப்பாட்டு முடிந்தவுடன் படிகளில் உள்ள கற்பூரத்தை ஏற்றி படி பூஜை செய்ய வேண்டும். பிறகு மங்களம் சொல்லி அனைவரும் கற்பூர தீபத்தை கண்களில் ஒற்றிக்கொள்ள இப்பூஜை இனிதே முடியும்.

பஜனை முடிந்த பிறகு நடக்கும் அன்னதானத்தில் முதலில் கன்னிச்சாமி ஒருவரை உண்ணச்செய்ய வேண்டும். சாமிகள் சரணம் சொல்லிய பிறகே அன்னத்தில் கைவைக்க வேண்டும். அதுபோல சரணம் சொல்லிய பிறகே எழுந்திருக்க வேண்டும்.
Tags:    

Similar News