செய்திகள்
அமித் ஷா

நான்கு தலைமுறையாக ஆண்டபோதிலும் ஏன் இதையெல்லாம் செய்யவில்லை: கேள்விகளை அடுக்கிய அமித் ஷா

Published On 2021-01-17 12:55 GMT   |   Update On 2021-01-17 12:55 GMT
நான்கு தலைமுறையாக இந்தியாவை ஆண்டபோதிலும் மக்களுக்கு எதையுமே செய்யவில்லை என்று அமித் ஷா குற்றம்சாட்டியுள்ளார்.
கர்நாடக மாநிலம் பாகல்கோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:-

நான் காங்கிரஸ் கட்சி தலைவர்களை பார்த்து ஒன்ற கேட்க விரும்புகிறேன். நீங்கள் நான்கு தலைமுறையாக ஆட்சி செய்தீர்கள். அப்படி இருக்கும்போது ஏன் ஏழை பெண்கள் வீட்டில் சமையல் எரிவாயு இல்லை?. அவர்களுக்கு ஏன் கழிப்பிடம் வசதி இல்லை?. மின்சாரம், வீடுகள், ஆயுஷ்மன் பாரத் திட்டம் ஏன்  இல்லை?. ஏனென்றால், அவர்கள் வறுமையை ஒழிக்க விரும்பவில்லை. ஆனால் ஏழை?.

காங்கிரஸ் சொல்வதை நம்ப வேண்டாம். உங்களுக்கான நேரம் வரும்போது, தடுப்பூசி போட்டுக்கொள்ளவும். இந்தியா விரைவில் கொரோனா இல்லாத நாடாகும்.

முன்னதாக நாம் சீனாவில் இருந்து பொம்மைகளை வாங்கிக் கொண்டிருந்தோம். தற்போது இந்தியாவின் முதல் பொம்மை உற்பத்தி செய்யும் இடங்கள் கோபாலில் கட்டப்பட்டு வருகிறது. கோபாலில் தயாரிக்கப்படும் பொம்மைகளை வைத்து இந்தியா முழுவதும் உள்ள குழந்தைகள் விளையாட இருப்பதால் நீங்கள் பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டும். நாம் சீனாவில் இருந்து பொம்மைகள் வாங்க வேண்டாம்’’ என்றார்.
Tags:    

Similar News