செய்திகள்
சரத்பவார்

சுயமரியாதை இருந்தால் பதவியில் தொடரலாமா என கவர்னர் யோசிப்பார் - சரத்பவார் தாக்கு

Published On 2020-10-19 22:25 GMT   |   Update On 2020-10-19 22:25 GMT
சுயமரியாதை இருந்தால் பதவியில் தொடரலாமா என்பது குறித்து கவர்னர் யோசிப்பார் என்று சரத்பவார் கூறினார்.
மும்பை:

மகராஷ்டிரா மாநிலத்தில் வழிபாட்டு தலங்களை திறப்பது குறித்து கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி சமீபத்தில் முதல் மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில் அவர் முதல் மந்திரி உத்தவ் தாக்கரேயை திடீரென மதச்சார்பின்மைக்கு மாறிவிட்டீர்களா என கேட்டு இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயும் பதிலடி கொடுத்தார். இதனால் அரசியல் சாசனத்தின் கீழ் செயல்படும் கவர்னர் மற்றும் முதல்-மந்திரி இடையே மதச்சார்பின்மை மற்றும் இந்துத்வா கொள்கை விவகாரத்தில் மோதல் ஏற்பட்டது.

இந்நிலையில், உஸ்மனாபாத் மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கவர்னர், முதல் மந்திரிக்கு எழுதிய சர்ச்சைக்குரிய கடிதம் குறித்து கூறியதாவது:

முதல்-மந்திரிக்கு கவர்னர் எழுதிய கடிதத்தில் உள்ள வார்த்தைகள் குறித்து உள்துறை மந்திரி அமித்ஷா அதிருப்தி தெரிவித்துள்ளார். சுயமரியாதை உள்ள எவரும் இனிமேல் அந்தப் பதவியில் தொடரலாமா அல்லது வேண்டாமா என யோசிப்பார் என குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News