செய்திகள்
பீட்ரூட்

தொடர் மழையால் பீட்ரூட் விலை உயர்வு- விவசாயிகள் மகிழ்ச்சி

Published On 2021-10-12 10:16 GMT   |   Update On 2021-10-12 10:16 GMT
ஒட்டன்சத்திரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக பீட்ரூட் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஒட்டன்சத்திரம்:

ஒட்டன்சத்திரம் அருகே உள்ள அம்பிளிக்கை, தங்கச்சியம்மாபட்டி, கொசவபட்டி, கேதையுறும்பு ஆகிய பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் பீட்ரூட் நடவு செய்துள்ளனர். தற்போது அறுவடை நடைபெற்று வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு பீட்ரூட் ஒரு கிலோ ரூ.5 முதல் ரூ.6 வரை ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் மொத்த வியாபாரிகள் கொள்முதல் செய்தனர். தற்பொழுது இப்பகுதியில் மழை பெய்து வருவதால் பீட்ரூட் விலை உயர்ந்துள்ளது.

ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் ஒரு கிலோ பீட்ரூட் ரூ.7 முதல் ரூ.8 வரை மொத்த வியாபாரிகள் வாங்குகின்றனர். பீட்ரூட் விலை உயர்வால் ஒட்டன்சத்திரம் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் இருந்து தினசரி ஏராளமான டன் கணக்கில் பீட்ரூட் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளா உள்பட வெளி மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.
Tags:    

Similar News