ஆட்டோமொபைல்

யமஹாவின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்

Published On 2019-06-13 11:34 GMT   |   Update On 2019-06-13 11:34 GMT
எளிதில் கழற்றி மாட்டக்கூடிய பேட்டரிகளுடன் யமஹா நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டது.



யமஹா நிறுவனம் தனது இ.சி. 05 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது. புதிய ஸ்கூட்டரில் எளிதில் கழற்றி மாட்டக் கூடிய பேட்டரிகள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் பேட்டரிகளை சுலபமாக சார்ஜ் செய்து கொள்ளலாம்.

யமஹாவின் புதிய இ.சி. 05 மாடல் யமஹா மற்றும் தாய்வான் நாட்டு மோட்டார்சைக்கிள் நிறுவனமான கோகோரா இடையேயான கூட்டணியில் உருவாகி இருக்கிறது. கடந்த ஆண்டு இரு நிறுவனங்களும் ஒப்பந்தமிட்டு எலெக்ட்ரிக் வாகனங்களை உருவாக்கும் பணிகளை துவங்கின.



அந்த வகையில் இ.சி. 05 மாடலின் வடிவமைப்பை யமஹா நிறுவனமும் பவர்டிரெயின் மற்றும் தொழில்நுட்ப அம்சங்களை கோகோரோ நிறுவனம் உருவாக்கி இருக்கிறது. புதிய இ.சி. 05 ஸ்கூட்டரின் சிறப்பம்சங்கள் பற்றி எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

யமஹா நிறுவனம் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டீசர் வீடியோவை வெளியிட்டுள்ளது. புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சம் 90 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 100 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும். முதற்கட்டமாக யமஹா இ.சி. 05 ஸ்கூட்டர் தாய்வானில் மட்டும் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

தாய்வானில் புதிய யமஹா இ.சி. 05 ஸ்கூட்டர் ஆகஸ்டு மாதத்தில் விற்பனைக்கு வரும் என தெரிகிறது. அதன் பின் இது சர்வதேச சந்தையில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News