செய்திகள்
மரணம்

வத்தலக்குண்டு அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவன் மரணம்

Published On 2020-01-10 04:17 GMT   |   Update On 2020-01-10 04:17 GMT
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்த பள்ளி மாணவன் திடீரென உயிரிழந்தார்.
வத்தலக்குண்டு:

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள விராலிமாயன்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பெருமாள் கோவில் பட்டியைச் சேர்ந்தவர் அழகர்சாமி. இவரது மகன் ஹரிஹரசுதன் (வயது 9). அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான்.

கடந்த சில நாட்களாக மாணவன் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டான். வத்தலக்குண்டுவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் 4 நாட்கள் சிகிச்சை பெற்றும் காய்ச்சல் குணமாகவில்லை. இதனையடுத்து மதுரை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டான். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான்.

இதனிடையே ஹரிஹரசுதனின் சகோதரியான பிரியா (11) என்பவருக்கும் மர்ம காய்ச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அவரது குடும்பத்தினர் மிகுந்த கவலையடைந்துள்ளனர்.

பெருமாள் கோவில்பட்டியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி அப்பகுதியில் காய்ச்சல் பரவுவதை தடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

பெரியகுளம் அருகே உள்ள சில்வார்பட்டியைச் சேர்ந்த ராஜா மகள் சுபாஷினி (7), 2-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில நாட்களாக இவருக்கு மர்ம காய்ச்சல் ஏற்பட்டது. தேனி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட போது அவருக்கு டெங்கு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News