செய்திகள்
உறுதிமொழி ஏற்ற திருப்பூர் மாநகராட்சி ஊழியர்கள்.

அரசமைப்பு தின உறுதிமொழி ஏற்பு

Published On 2021-11-26 10:10 GMT   |   Update On 2021-11-26 10:10 GMT
திருப்பூர் மாநகராட்சி ஊழியர்கள் அரசமைப்பு தின உறுதிமொழி ஏற்றனர்.
திருப்பூர்:

நாடு முழுவதும் இன்று அரசமைப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இதையடுத்து திருப்பூர் மாநகராட்சி  ஊழியர்கள் அரசமைப்பு தின உறுதிமொழி ஏற்றனர். 

இந்திய மக்களாகிய நாம் இந்திய நாட்டினை இறையாண்மையும், சமநலச்சமுதாயமும், சமயசார்பின்மையும், மக்களாட்சி முறையும் அமைந்ததொரு குடியரசாக நிறுவவும், அதன் குடிமக்கள் அனைவரும் சமுதாயம், பொருளியல், அரசியல் நீதி, எண்ணம், அதன் வெளியீடு, கோட்பாடு, சமய நம்பிக்கை, வழிபாடு இவற்றில் தன்னுரிமை, சமுதாயப்படி நிலை, வாய்ப்பு நலம் இவற்றில் சமன்மை ஆகியவற்றை எய்திட செய்யவும்.

அவர்கள் அனைவரிடையேயும் தனிமனிதனின் மாண்பு, நாட்டு மக்களின் ஒற்றுமை, ஒருமைப்பாடு இவற்றை உறுதிப்படுத்தும் உடன் பிறப்புரிமையினை வளர்க்கவும், உள்ளார்ந்த உறுதியுடையவராய், நம்முடைய அரசமைப்பு பேரவையில், 1949 நவம்பர் 26-ம் நாளாகிய இன்று இந்த அரசமைப்பினை ஏற்கிறோம் என்று உறுதிமொழி ஏற்றனர். 
Tags:    

Similar News