செய்திகள்
பில்கேட்ஸ்

கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதில் இந்தியாவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது - பில்கேட்ஸ்

Published On 2020-10-20 19:13 GMT   |   Update On 2020-10-20 19:13 GMT
கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி திறன் முக்கிய பங்கு வகிக்கும் என மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

கிராண்ட் சேலஞ்ச்ஸ் வருடாந்திர கூட்டத்தில் காணொளி காட்சி மூலம் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது:-

எந்தவொரு அடுத்த தொற்றுநோயையும் சமாளிக்க உலகளாவிய சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்காலத்தில் எந்தவொரு தொற்று நோயையும் திறம்பட சமாளிக்க தடுப்பூசி தளங்களை உருவாக்குவது அவசியம்.

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி திறன்கள் முக்கிய பங்கு வகிக்கும். கடந்த இரண்டு தசாப்தங்களாக இந்தியா தனது மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதால் இந்தியா மிகவும் ஊக்கமளிக்கிறது.

இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி கொரோனாவை எதிர்த்துப் போராடுவதற்கு முக்கியமானதாக இருக்கும். பெரிய அளவில் கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதில் இந்தியாவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது என தெரிவித்தார்.
Tags:    

Similar News