செய்திகள்
கண்டுபிடிக்கப்பட்ட சுரங்கப் பாதை

ஜம்முவில் சர்வதேச எல்லைப்பகுதியில் 150 மீட்டர் நீள சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு

Published On 2021-01-23 19:13 GMT   |   Update On 2021-01-23 19:13 GMT
ஜம்மு காஷ்மீரில் சர்வதேச எல்லைப்பகுதியில் 150 மீட்டர் நீளத்திற்கு சுரங்கப்பாதை ஒன்றை எல்லை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்து உள்ளனர்.
ஜம்மு:

ஜம்மு மற்றும் காஷ்மீரில் கத்துவா நகரில் பன்சார் என்ற இடத்தில் அமைந்த சர்வதேச எல்லைப்பகுதியில் எல்லை பாதுகாப்பு படையினர் 150 மீட்டர் நீளம் மற்றும் 30 அடி ஆழம் கொண்ட சுரங்கப்பாதை ஒன்றை கண்டுபிடித்து உள்ளனர்.

கடந்த 2020-ம் ஆண்டு ஜூனில் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஹெக்சாகாப்டர் ஒன்று இதே பகுதியில் எல்லை பாதுகாப்பு படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதில் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் இருந்ததும் தெரிய வந்தது.

கடந்த 2019-ம் ஆண்டு இந்த பகுதி வழியே கும்பல் ஒன்று இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றது. எல்லை பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தி ஊடுருவல் முயற்சியை முறியடித்தனர்.

இந்த சுரங்கப்பாதையானது சம்பா, ஹிராநகர் மற்றும் கத்துவா பகுதியில் கடந்த 6 மாதங்களில் கண்டுபிடிக்கப்பட்ட 4வது சுரங்கப்பாதையாகும்.

இதேபோல் ஜம்மு நகரில் மொத்தத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 10-வது சுரங்கப்பாதை ஆகும் என்று எல்லை பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News