ஆன்மிகம்
முளைப்பாரி விழா

பசுமலைசக்தி மாரியம்மன் கோவில் முளைப்பாரி விழா

Published On 2020-10-10 03:50 GMT   |   Update On 2020-10-10 03:50 GMT
பிரசித்தி பெற்ற சக்தி மாரியம்மனுக்கு முளைப்பாரி விழாவை முன்னிட்டு பால், பன்னீர், இளநீர், விபூதி உள்ளிட்ட 11 வகையான வாசனை திரவியங்கள் கொண்டு மகா அபிஷேகம் நடைபெற்றது.
திருப்பரங்குன்றத்தை அடுத்த பசுமலை தியாகராஜர் குடியிருப்பு பகுதியின் நுழைவு வாயிலில் பிரசித்தி பெற்ற சக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 63-வது ஆண்டு முளைப்பாரி உற்சவ விழா கடந்த 2-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

விழாவையொட்டி சிங்க வாகனத்தில் சக்தி மாரியம்மன் எழுந்தருளி வீதி உலா வந்தார். பக்தர்ளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவின் முத்தாய்ப்பாக நேற்று மறு பூஜை நடைபெற்றது.

இதில் சக்தி மாரியம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், விபூதி உள்ளிட்ட 11 வகையான வாசனை திரவியங்கள் கொண்டு மகா அபிஷேகம் நடைபெற்றது. மேலும் தீப தூப ஆராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சமூக இடைவெளிவிட்டும், முக கவசம் அணிந்தும் அரசின் நெறிமுறைகளுக்கு உட்பட்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News