செய்திகள்
அபராதம்

டெங்கு கொசு காணப்பட்ட தங்கும் விடுதிகளுக்கு அபராதம்

Published On 2021-09-07 23:44 GMT   |   Update On 2021-09-07 23:44 GMT
13 விடுதிகளில் ஆய்வு செய்யப்பட்டதில் 2 விடுதிகளில் பயன்படாத பொருட்களில் தேங்கிய மழைநீரில் டெங்கு கொசுப்புழு காணப்பட்டது.
வேலூர்:

வேலூர் மாநகராட்சி பகுதியில் டெங்கு கொசுப்புழு உற்பத்தியை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கமிஷனர் சங்கரன் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் 2-வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையிலான ஊழியர்கள் நேற்று வேலூர் மிட்டா ஆனந்தராவ் தெரு, காந்தி ரோட்டில் உள்ள தங்கும் விடுதிகளில் டெங்கு கொசு புழுக்கள் உள்ளதா என்று ஆய்வு செய்தனர்.

13 விடுதிகளில் ஆய்வு செய்யப்பட்டதில் 2 விடுதிகளில் பயன்படாத பொருட்களில் தேங்கிய மழைநீரில் டெங்கு கொசுப்புழு காணப்பட்டது. அதையடுத்து அந்த 2 விடுதி உரிமையாளருக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டு, வசூலிக்கப்பட்டது. மேலும் 2-வது முறையாக கொசுப்புழுக்கள் கண்டறியப்பட்டால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்தனர்.
Tags:    

Similar News