செய்திகள்
விஷம் வைத்ததில் இறந்து போன மயில்கள்.

19 மயில்களை விஷம் வைத்து கொன்ற விவசாயி கைது

Published On 2021-07-18 10:27 GMT   |   Update On 2021-07-18 10:27 GMT
கடந்த வாரம் திருப்பூர் அருகே முத்தணம் பாளையத்தில் 24 மயில்கள் இறந்தன.
பல்லடம்:

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் ஊராட்சி வலசுப்பாளையத்தில் பழனிச்சாமி என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் 19 மயில்கள் இறந்து கிடப்பதாக வனத் துறை மற்றும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு திருப்பூர் வனச்சரக அலுவலர் காசிலிங்கம், வனவர் திருமூர்த்தி உள்ளிட்ட வனத்துறையினர் மற்றும் போலீசார் சென்று பார்வையிட்டனர். அப்போது தோட்டத்தில் 7 ஆண் மயில்கள், 12 பெண் மயில் கள் என 19 மயில்கள் இறந்து கிடந்ததை  கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.இதையடுத்து அரசு கால்நடை உதவி மருத்துவர் அறிவுசெல்வம் சம்பவ இடத்திற்கு வந்து  இறந்து  கிடந்த மயில்களை பிரேத பரிசோதனை செய்தார். 

பிரேத பரிசோதனையில் 19 மயில்களும் விஷம் வைத்த அரிசியை சாப்பிட்டதால்  இறந்து தெரியவந்தது.இதையடுத்து மயில்களை விஷம் வைத்து கொன்றது யார்? என்பது  குறித்து வனத்துறை அதிகாரிகள் மற்றும் பல்லடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.விசாரணையில் விவசாயி பழனிசாமியே மயில் களை விஷம் வைத்து கொன்றது தெரியவந்தது.  தோட்டத்துக்கு வரும் மயில்கள் பாத்திகளை சேதப்படுத்தியுள்ளன.

 இதனால் கோபமடைந்த விவசாயி பழனிசாமி அரிசியுடன் விஷமருந்து கலந்து வைத்துள்ளார். அதை சாப்பிட்ட 12 பெண் மற்றும் 7 ஆண் மயில்கள் உயிரிழந்துள்ளன. இதையடுத்து  பழனிசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

கடந்த வாரம் திருப்பூர் அருகே முத்தணம் பாளையத்தில் 24 மயில்கள் இறந்தன. தற்போது பல்லடம் வட்டாரத்தில் 19 மயில்கள் உயிரிழந்தது வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News