செய்திகள்
பட்டாசுகள்

நெல்லை மாவட்டத்தில் வெடிபொருள் விற்பனை நிலையங்களை 6 நாட்கள் மூட உத்தரவு

Published On 2019-10-19 08:07 GMT   |   Update On 2019-10-19 08:07 GMT
நெல்லை மாவட்டத்தில் வெடிபொருள் விற்பனை நிலையங்களை 6 நாட்கள் மூட வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ஷில்பா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நெல்லை:

நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நாங்குநேரி தொகுதி இடைதேர்தல் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நடக்கிறது. 24-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த தேர்தல் நடைபெறுவதையொட்டி நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து வெடிபொருள் விற்பனை நிலையங்களும், அனைத்து வெடிபொருள் கிடங்குகளும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் 25-ந் தேதி வரை 6 நாட்கள் மூடிவைத்து இருக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

எனவே மேற்கண்ட 6 நாட்களும் வெடிபொருள் விற்பனை நிலையங்கள், கிடங்குகளையும் திறந்து வைத்து இருக்க கூடாது. எந்த வியாபாரமும் செய்யக்கூடாது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News