செய்திகள்
கோப்புபடம்.

தைலம் காய்ச்சி விற்க மானியக்கடன் - மலைவாழ் மக்கள் வேண்டுகோள்

Published On 2021-10-16 09:00 GMT   |   Update On 2021-10-16 09:00 GMT
தைல புல்லினை மூலப்பொருளாக கொண்டு அதனை அரைத்து அதில் இருந்து கிடைக்கும் சாற்றினை பக்குவப்படுத்தி எண்ணெய் பாட்டிலில் நிரப்பி தைலமாக விற்பனை செய்து வருகின்றனர்.
உடுமலை:

உடுமலை அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் குரு மலை மேல் குருமலை, குளிப்பட்டி, மாவடப்பு உள்ளிட்ட மலை கிராமங்கள் உள்ளது. இவற்றில் திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவிக்கு மேல்7 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள குருமலையில் 120 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இவர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக நெல், நிலக்கடலை, தைல புல் ஆகியவற்றை சாகுபடி செய்வதோடு வனப் பகுதியில் விளையும் காட்டு நெல்லி, எலுமிச்சை உள்ளிட்டவற்றை பறித்து விற்பனை செய்தும் வருகின்றனர். 

மேலும் கால்நடை வளர்ப்பு மற்றும் மேய்ச்சல் போன்றவற்றின் தொழிலாக செய்து வருகின்றனர். இதேபோல குழிப்பட்டி, மாவடப்பு, ஆகியவற்றில் தலா 150 குடும்பங்கள் வீதம் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். 

இம்மக்களின் பொருளாதார தேவையை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்காற்றுவது தைலம் விற்பனையாக உள்ளது. தைல புல்லினை மூலப்பொருளாக கொண்டு அதனை அரைத்து அதில் இருந்து கிடைக்கும் சாற்றினை பக்குவப்படுத்தி எண்ணெய் பாட்டிலில் நிரப்பி தைலமாக விற்பனை செய்து வருகின்றனர். தைலம் சமவெளிப் பகுதிகளில் விற்பனையாகிறது. 

இந்தநிலையில் குடிசைத் தொழில் போல வீடுகள் தோறும் தைலம் காய்ச்சி விற்பனை செய்வதற்கு மலைவாழ் மக்களுக்கு மானியத்துடன் கடனுதவி வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் வீடுகளுக்கு சோலார், மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும். 

மலைவாழ் மக்களின் குழந்தைகளுக்கு படிக்க துவக்கப்பள்ளி இருந்தாலும் ஆசிரியர்கள் சரிவர வருவதில்லை. எனவே நிரந்தரமாக பணியாற்றும் வகையில் ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் என பழங்குடியின மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
Tags:    

Similar News