செய்திகள்
புதுச்சேரி துணைநிலை கவர்னராக பதவியேற்றார் தமிழிசை சவுந்தரராஜன்

புதுச்சேரி துணைநிலை கவர்னராக பதவியேற்றார் தமிழிசை சவுந்தரராஜன்

Published On 2021-02-18 03:56 GMT   |   Update On 2021-02-18 03:56 GMT
புதுச்சேரி துணை நிலை கவர்னராக டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பொறுப்பு ஏற்றார்.
புதுச்சேரி:

புதுச்சேரியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கும், துணை நிலை கவர்னராக இருந்த கிரண்பேடிக்கும் இடையே கடுமையான மோதல் நிலவி வந்தது. அவரை மாற்றவேண்டும் என்று நாராயணசாமி போர்க்கொடி தூக்கி வந்தார். இந்தநிலையில், கிரண்பேடியை திரும்பப்பெறுவதாக, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று முன்தினம் அறிவித்தார்.

இதற்கிடையே, தெலுங்கானா கவர்னராக இருக்கும் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூடுதல் பொறுப்பாக புதுச்சேரி மாநில கவர்னர் பொறுப்பையும் கவனித்துக்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், இன்று காலை புதுச்சேரி துணை நிலை கவர்னராக டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பொறுப்பு ஏற்றார்.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தமிழிசைக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

கிரண்பேடி நீக்கப்பட்டதையடுத்து பொறுப்பு கவர்னராக தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பொறுப்பேற்றார். புதுச்சேரியின் 5வது பெண் கவர்னராக தமிழிசை பொறுப்பேற்றுக்கொண்டார்.

பதவி ஏற்பு விழாவில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி பங்கேற்றார்.
Tags:    

Similar News