செய்திகள்
அரவிந்த் கெஜ்ரிவால்

தடுப்பூசி குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்- அரவிந்த் கெஜ்ரிவால்

Published On 2021-01-16 14:35 GMT   |   Update On 2021-01-16 14:35 GMT
கொரோனா தடுப்பூசி குறித்த வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுடெல்லி:

இந்தியாவில் கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகளை அவசர கால பயன்பாட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து, இரு தடுப்பூசிகளும் போடும் பணி இன்று முதல் தொடங்கியுள்ளது. முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி முதல் கட்டமாக போடப்படுகிறது.

இந்த நிலையில், தடுப்பூசிகள் குறித்த வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். அவர்  கூறியிருப்பதாவது: -

உலகில் மிகப்பெரிய கொரோனா தடுப்பு மருந்து நிகழ்வு நாட்டில் தொடங்கியுள்ளது. இதனால் கொரோனா தடுப்பு மருந்து குறித்த வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கிறேன். தடுப்பூசிகள் பாதுகாப்பானது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்” என்றார்.
Tags:    

Similar News