ஆட்டோமொபைல்
சுசுகி பர்க்மேன் ஸ்டிரீட்

தொடர் சோதனையில் சுசுகி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

Published On 2021-02-26 11:15 GMT   |   Update On 2021-02-26 11:15 GMT
சுசுகி மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் இந்தியாவில் தொடர்ந்து சோதனை செய்யப்படுகிறது.

சுசுகி மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் இந்தியாவில் தனது முதல் எலெக்ட்ரிக் வாகனத்தை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. புதிய எலெக்ட்ரிக் வாகனம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் ஆகும். இது பர்க்மேன் ஸ்டிரீட் 125 மாடலை தழுவி உருவாக்கப்பட்டு வருகிறது.

புதிய சுசுகி பர்க்மேன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. அந்த வகையில் இந்த மாடலின் புதிய ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

புது ஸ்பை படங்களின் படி சுசுகி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தோற்றத்தில் ஐசி என்ஜின் வேரியண்டை போன்றே காட்சியளிக்கிறது. அதன்படி புது மாடலில் எல்இடி ஹெட்லேம்ப்கள், இன்டிகேட்டர்கள், பெரிய விண்ட்ஸ்கிரீன், ரியர்வியூ மிரர், டெயில் லேம்ப்கள் மற்றும் கிராப் ரெயில்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

டிசைன் மற்றும் ஸ்டைலிங் முந்தைய மாடலை போன்றே காட்சியளித்த போதும், பர்க்மேன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் டூயல் டோன் வைட் / புளூ நிறத்தில் கிடைக்கிறது. இதுமட்டுமின்றி புதிய ஸ்கூட்டர் பல்வேறு இதர நிறங்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

எலெக்ட்ரிக் மாடல் என்ற வகையில், சுசுகி பர்க்மேன் இ ஸ்கூட்டரில் எக்சாஸ்ட் வழங்கப்படவில்லை. இத்துடன் புது மாடல் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ப்ளூடூத் மூலம் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி கொண்டிருக்கும் என தெரிகிறது.
Tags:    

Similar News