உள்ளூர் செய்திகள்
போக்குவரத்து மாற்றம்

போக்குவரத்து மாற்றம்

Published On 2022-04-15 11:24 GMT   |   Update On 2022-04-15 11:24 GMT
மதுரையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மதுரை

மதுரை மாநகரில் இன்று முதல் வருகிற 19-&ந் தேதி வரை கள்ளழகர் எதிர்சேவை, வைகை ஆற்றில் எழுந்தருளல், பூப்பல்லக்கு ஆகிய வைபவங்கள் நடக்கிறது. எனவே மதுரையில் தற்காலிகமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இது வருகிற 19&ந்தேதி இரவு 10 மணி முதல் அதிகாலை 7 மணி வரை நடைமுறையில் இருக்கும்.

இன்று மாலை கள்ளழகர் அவுட்போஸ்ட் அம்பலகாரர் மண்டபம் வந்தவுடன் அழகர்கோவில் சாலையில் தமுக்கம் சந்திப்பில் இருந்து பெரியார் சிலை வரை இரு வழிகளிலும் வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது.
புதுநத்தம் ரோடு, அழகர்கோவில் ரோடு, மற்றும் மேலூர் ரோட்டில் இருந்து கீழவாசல், யானைக்கல் மார்க்கமாக செல்ல வேண்டிய மாநகர பேருந்துகள்,  போலீஸ் சூப்பிரண்டு பங்களா சந்திப்பு, பாரதி உலா ரோடு, தாமரைத்தொட்டி, ரேஸ்கோர்ஸ் கிழக்குச் சாலை, கக்கன் சிலை சந்திப்பு, மாவட்ட கோர்ட்டு, கே.கே.நகர் ஆர்ச், 80 அடிரோடு, ஆவின் சந்திப்பு, குருவிக்காரன் சாலை பாலம், காமராஜர் சாலை, முனிச்சாலை, கீழவாசல், கீழமாரட் வீதி வழியாக யானைக்கல் செல்ல வேண்டும்.

பி.டி.ராஜன் சாலையில் இருந்து தமுக்கம் வரும் வாகனங்கள் பீ.பீ.குளம் சந்திப்பு, ஜவஹர் சாலை, யூனியன் ஆபிஸ் சந்திப்பு, ஷி.றி.பங்களா சந்திப்பு, பாரதி உலா ரோடு, தாமரைத்தொட்டி, ரேஸ் கோர்ஸ் கிழக்குச் சாலை, கக்கன் சிலை, நீதிமன்றம், கே.கே.நகர் ஆர்ச், 80 அடி ரோடு, ஆவின் சந்திப்பு, குருவிக்காரன் சாலை, காமராஜர் சாலை, முனிச்சாலை, கீழவாசல், கீழமாரட் வீதி வழியாக யானைக்கல் செல்ல வேண்டும்.

புது நத்தம் ரோடு, அழகர் கோயில் ரோட்டிற்கு செல்ல வேண்டிய பஸ்கள் சிம்மக்கல், தைக்கால் தெரு, எம்.ஜி.ஆர். பாலம், வைகை வடகரை சாலை, செல்லூர் ரவுண்டானா, குலமங்கலம் ரோடு, எஸ்.ஆலங்குளம், கோசாகுளம், பனங்காடி, உச்சப்பரம்புமேடு, அய்யர்பங்களா, மூன்று மாவடி வழியாக செல்ல வேண்டும்.

மேலூர் ரோட்டிற்கு சிம்மக்கல் வழியாக செல்ல வேண்டிய பஸ்கள் சிம்மக்கல், தைக்கால் தெரு, எம்.ஜி.ஆர். பாலம், வைகை வடகரை, செல்லூர் ரவுண்டானா, குலமங்கலம் ரோடு, மீனாம்பாள்புரம், பீ.பீ.குளம் சந்திப்பு ஜவஹர் சாலை, யூனியன் ஆபிஸ் சந்திப்பு, போலீஸ் சூப்பிரண்டு பங்களா, பாரதி உலா ரோடு, தாமரைத்தொட்டி, ரேஸ் கோர்ஸ் கிழக்குச்சாலை, கக்கன் சிலை, நீதிமன்றம், ஆர்ச் வழியாக மேலூர் ரோடு செல்ல வேண்டும்.

மேலூர் ரோட்டிற்கு சிம்மக்கல் வழியாக செல்ல வேண்டிய பஸ்கள் சிம்மக்கல், அண்ணாசிலை, கீழவெளி வீதி, கீழவாசல், காமராசர் சாலை, குருவிக்காரன் சாலை பாலம், ஆவின் சந்திப்பு, கே.கே.நகர் 80 அடி ரோடு வழியாக மேலூர் செல்ல வேண்டும்.
-மேற்கண்ட தகவலை மதுரை மாநகர போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News