உள்ளூர் செய்திகள்
பிடிப்பட்ட மானை படத்தில் காணாலம்.

ஏலகிரி மலையில் இருந்து ஊருக்குள் புகுந்த மான்

Published On 2022-05-05 09:25 GMT   |   Update On 2022-05-05 09:25 GMT
ஏலகிரி மலையில் இருந்து ஊருக்குள் புகுந்த மானை வனத்துறையினர் மீட்டனர்.
ஜோலார்பேட்டை:

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. மேலும் ஏலகிரி மலை நான்கு புறமும் மலைகளால் சூழப்பட்டு அடர்ந்த காடாக காட்சியளித்து வருகிறது.

மேலும் இந்த காட்டுப்பகுதிக்குள் மான், கரடி, சிறுத்தை, மலைப்பாம்பு, குரங்கு உள்ளிட்ட பல்வேறு காட்டு விலங்குகள் வசித்து வருகின்றன. வனப்பகுதியை யும் காட்டு விலங்குகளையும் கண்காணிக்கும் பணியில் ஏலகிரி மலை வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் இன்று அதிகாலை காட்டுப்ப குதிக்குள் இருந்து வழி தவறி அத்தனாவூர் காட்டுப்ப குதியில் இருந்து போர் பகுதிக்குள் வந்த ஆண் புள்ளிமான் ஒன்று சாலையில் வந்ததை கண்டு அங்குள்ள நாய்கள் அவற்றை விரட்டி கடிக்க முயன்றுள்ளது. 

அப்போது அந்த புள்ளிமான் அருகாமையில் இருந்த தனியார் தங்கும் விடுதிக்குள் நுழைந்ததால் அங்கிருந்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்து அதனை மீட்டனர்.
Tags:    

Similar News