செய்திகள்
அதிவேக காந்த ரெயில்

சீனாவில் அதிவேக காந்த ரெயில் அறிமுகம்

Published On 2021-07-21 04:56 GMT   |   Update On 2021-07-21 04:56 GMT
அதிவேக காந்த ரெயிலை சீனா பொது போக்குவரத்துக்கு அறிமுகப்படுத்தியது. கிங்டோ நகரில் இந்த புதிய போக்குவரத்து முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பீஜிங்:

சீனா மணிக்கு 600 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடிய காந்த ரெயிலை கடந்த 2019-ம் ஆண்டு வடிவமைத்தது‌‌. கடந்த ஆண்டு ஜூன் மாதம் சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஷாங்டாங் மாகாணத்தின் துறைமுக நகரமான கிங்டோவில் இந்த ரெயிலின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்தது.

இந்நிலையில் இந்த அதிவேக காந்த ரெயிலை சீனா நேற்று பொது போக்குவரத்துக்கு அறிமுகப்படுத்தியது. கிங்டோ நகரில் இந்த புதிய போக்குவரத்து முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தண்டவாளத்தை தொடாமல் காந்த சக்தி உதவியுடன் மிதந்தபடி செல்லும் இந்த ரெயில் 2 முதல் 10 ரெயில் பெட்டிகள் வரை கொண்டு பயணிக்கும் திறன் கொண்டது எனவும், ஒவ்வொரு ரெயில் பெட்டியிலும் 100-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 600 கி.மீ. வேகத்தில் பயணிப்பது மூலம் உலகிலேயே அதிவேகமாக செல்லும் தரைவழி வாகனம் இந்த ரெயில்தான் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News