செய்திகள்
கோப்புபடம்

ஆன்லைனில் வரி செலுத்தும் முறை-பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுகோள்

Published On 2021-07-20 10:22 GMT   |   Update On 2021-07-20 10:22 GMT
வரி இனங்களை ‘ஆன்லைன்’ வாயிலாக செலுத்தும் நடைமுறை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உடுமலை:

திருப்பூர் நகராட்சி நிர்வாக மண்டலத்தின் கீழ் உள்ள நகராட்சிகள் அனைத்தும் கம்ப்யூட்டர் ‘சாப்ட்வேர்’ வாயிலாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதனால் அரசின் நலத்திட்ட உதவி பெறுதல், வரி செலுத்துதல், பிறப்பு மற்றும் இறப்பு சான்று பெறுதல் போன்ற 29 சேவைகள் மற்றும் நகராட்சிகளின் அலுவலர் பணிகள் அனைத்துமே ‘ஆன்லைன்’ மார்க்கமாக மேற்கொள்ளப்படுகிறது.

ஆனால், விழிப்புணர்வு இன்மையால் இத்திட்டம் மக்களைச் சென்றடையவில்லை. அதிகப்படியானவர்கள் சொத்து வரி, தொழில் வரி, விளம்பர கட்டணம், குடிநீர் கட்டணம் உள்ளிட்ட வரியினங்களை செலுத்த நகராட்சிகளுக்கு நேரடியாக வந்து செல்கின்றனர். கொரோனா பரவல் உள்ள நிலையில் ஆன்லைன் திட்டங்கள் குறித்து மக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது கட்டாயமாகும்.

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

பொதுமக்கள் ‘ஆன்லைன்’ வாயிலாக வரிசெலுத்தும் போது குறிப்பிட்ட வரியினத்தை தேர்வு செய்து, நகராட்சி குறியீடு, பழைய வரிவிதிப்பு எண் ஆகியவற்றை உள்ளீடு செய்து பணத்தை செலுத்தலாம். ஆனால், நிலுவைத்தொகை இருந்தாலும் அதனை செலுத்த வேண்டும் என்பதால், பலரும் நேரடியாக அலுவலகம் வந்து பணத்தை செலுத்த முற்படுகின்றனர். வெகுநேரம் காத்திருந்து வரி செலுத்துவதை தவிர்க்கவே, ஆன்லைன் திட்டம் கொண்டுவரப்பட்டது. 

இருப்பினும் குறைந்த எண்ணிக்கையிலான நபர்கள் மட்டுமே ஆன்லைனில் வரி இனங்களை செலுத்துகின்றனர். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News