பொது மருத்துவம்
தூங்குவதற்கு முன்பு எந்த பானங்களை பருகலாம்...

தூங்குவதற்கு முன்பு எந்த பானங்களை பருகலாம்...

Published On 2022-01-17 06:16 GMT   |   Update On 2022-01-17 06:16 GMT
இரவில் ஆழ்ந்த தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள். தூங்க செல்வதற்கு முன்பு அதிக கலோரிகள் கொண்ட உணவு பொருட்களை சாப்பிட்டால் தூக்கமின்றி தவிக்க வேண்டியதிருக்கும்.
இரவில் ஆழ்ந்த தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள். போதுமான நேரம் தூங்காமல் இருந்தாலோ, தூக்கம் வராமல் தவித்தாலோ அது ஆரோக்கியத்தை கெடுக்கும். உடல் பருமன் பிரச்சினைக்கும் வழி வகுத்துவிடும். தூங்க செல்வதற்கு முன்பு அதிக கலோரிகள் கொண்ட உணவு பொருட்களை சாப்பிட்டால் தூக்கமின்றி தவிக்க வேண்டியதிருக்கும். சர்க்கரை, காபின் கலந்த பொருட்களையும் சாப்பிடக்கூடாது.

சரி! தூங்குவதற்கு முன்பு எந்த பானங்களை பருகலாம்.

கிரீன் டீயை இரவு பருகுவது உடலுக்கு நல்லது. அதன் மூலம் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை பெறலாம். குறிப்பாக அது தூக்கத்திற்கு வழிவகை செய்யும். உடல் எடையையும், கொழுப்பையும் குறைக்க உதவும். இதய ஆரோக்கியத்திற்கும் நல்லது. மன அழுத்தம், கவலையை போக்கும். நோய் எதிர்ப்பு சக்தியையும் மேம்படுத்தும்.

தூங்குவதற்கு முன்பு பால் பருகும் வழக்கத்தை குழந்தை பருவத்திலிருந்தே நிறைய பேர் பின்பற்றுகிறார்கள். அது உடலுக்கு ஆரோக்கியம் தர வல்லது. அதில் கால்சியம் மற்றும் டிரிப்டோபன் கலந்திருக்கிறது. அது நன்றாக தூங்குவதற்கு உதவி புரியும். ஆனால் பருகுவது தரமான பாலாக இருக்க வேண்டும்.

இரவில் தூங்க செல்வதற்கு முன்பு திராட்சை ஜூஸ் சிறிதளவு பருகலாம். அதில் சர்க்கரை சேர்க்கக்கூடாது. அது நன்றாக தூங்க உதவி செய்யும். தொடர்ந்து திராட்சை ஜூஸ் பருகி வந்தால் எடை இழப்புக்கும் வழிவகுக்கும். சாமந்தி பூ டீயும் பருகலாம். அது தூக்கத்தை வரவழைப்பதோடு மனதிற்கு அமைதியையும் உண்டாக்கும். நரம்புகளுக்கும் நலம் பயக்கும். உடலில் குளுக்கோஸ் அளவையும், கட்டுப்படுத்தும்.
Tags:    

Similar News