உடற்பயிற்சி
வாதம், பித்தம், சிலேத்துமம் சரியாக இயங்க யோகச் சிகிச்சை

வாதம், பித்தம், சிலேத்துமம் சரியாக இயங்க யோகச் சிகிச்சை

Published On 2022-04-28 03:40 GMT   |   Update On 2022-04-28 03:40 GMT
நமது உடலில் வாத நாடி, பித்த நாடி, சிலேத்தும நாடிகள் இவை சரியாக இயங்கினால், உடலில் முழு ஆரோக்கியம் இருக்கும்.இதற்குத்தான் சித்தர்கள் நமக்கு மூன்று முக்கிய மூச்சு பயிற்சி பிராணாயாமத்தை அளித்துள்ளனர்.
காலை எழுந்தவுடன் காலைக் கடன்களை முடித்துவிட்டு, பல் துலக்கிவிட்டு, ஒரு டம்ளர் தண்ணீர்அருந்திவிட்டு கிழக்கு முகமாக ஒரு விரிப்பு விரித்து அதில் அமருங்கள். நிமிர்ந்து அமரவும்.முதுகெலும்பு நேராக இருக்கட்டும். தரையில் அமர முடியாதவர்கள் ஒரு நாற்காலியில் நிமிர்ந்து அமரவும்.

முதல் பயிற்சி - வயிற்று முறை

மூச்சு பயிற்சி

இரு கை விரல்களையும் வயிற்றின் பக்கத்தில் படத்தில் உள்ளது போல் வைக்கவும்.மூன்று எண்ணும் வரை மெதுவாக மூச்சை உள் இழுக் கவும்.மூன்று எண் ணும் வரை மூச்சை அடக்கி இருக்கவும்.பின் கைவிரல்களால் வயிற்றில் லேசாக அழுத்தி ஆறு எண்ணும் வரை (மனதில் ஆறு செகண்ட் எண்ணவும்) வேகமாக மூக்கு வழியாக மூச்சை வெளிவிடவும். அந்த இடத்தில் மூன்றுஎண்ணும்வரை மூச்சை அடக்கவும்.இது ஒரு முறை.இதே போல் பொறுமையாக ஐந்து முறைகள் பயிற்சி செய்யவும்.

பலன்கள்

உடலில் தசவாயுக்களும் பத்து விதமான வாயுவும் அதனதன் விகிதத்தில் சிறப்பாக இயங்கும்.கழுத்துவலி, இடுப்பு வலி, முதுகு வலி, மூட்டு வலி வராமல் வாழலாம்.ஜீரண மண்டலம் சரியாக இயங்கும்.இதயம் பாரமாகஇருப்பது சரியாகும், இதய வலி வராமல் வாழ லாம்.சதை பிடிப்பு, சதை இறுக்கம் இல்லாமல் வாழலாம்.மூட்டு வீக்கம் வராது.

மார்பு முறை மூச்சு பயிற்சி (பித்தம்)

கை விரல்களை படத்தில் உள்ளது போல் விலா எலும்பு பக்கத்தில் வைக்கவும்.மூன்று எண்ணும் வரை மெதுவாக மூச்சை உள் இழுக்கவும்.மூன்று எண்ணும் வரை மூச்சடக் கியிருக்கவும்.கைவிரலில் லேசாக அழுத்தம் கொடுத்து ஆறு எண்ணும் வரை மூச்சை மெதுவாக மூக்கு வழியாக வெளிவிடவும்.பின் மூன்று எண்ணும் வரை மூச்சடக்கி இருக்கவும்.இது ஒரு முறை.இதே போல் ஐந்து முறைகள் பயிற்சி செய்யவும்.

பலன்கள்

இதயம் , சிறுகுடல், இதயமேலுறை மிக நன்றாக சக்தி பெற்று இயங்கும்.ராஜ உறுப்புகளில் இதயம் முதன்மையான உறுப்பாகும்.இதயத்துடிப்பு சீராக இயங்கும்.இதய வால்வுகள் மிக நன்றாக இயங்கும்.எந்த ஒரு அடைப்பும் வராது.இதய வால்வுகள் நன்றாக இயங்கும்.உடலில் உஷ்ணத்தின் தன்மை சரியாக இருக்கும்.உடலில் உள்ள எல்லா உறுப்புகளுக்கும் ரத்த ஓட்டம் சரியாக பாயும்.பிராண சக்தி எல்லா உறுப்புகளுக்கும் சிறப்பாக கிடைக்கும்.சுறுசுறுப்பாகவும், உற்சாகமாகவும் இருக்கலாம்.சிறுகுடல் இயக்கம் மிகச் சிறப்பாக இருக்கும்.

சிலேத்துமம் - தோள்பட்டை

முறை மூச்சு பயிற்சி

விரிப்பில் நிமிர்ந்து அமரவும்.முதுகெலும்பு நேராக இருக்கட்டும்.கைகளை மடக்கி படத்தில் உள்ளதுபோல் இரு தோள்பட்டை பகுதியில் கை விரல்கள் படும்படி வைக்கவும்.மூன்று எண்ணும்வரை மூச்சை இழுத்து கொண்டு கைகளை தலைக்கு மேல் உயர்த்தவும்.மூன்று எண்ணி மூச்சடக் கிருக் கவும்.ஆறு எண்ணி மூச்சை வெளிவிட்டு கைகளை கீழே கொண்டு வரவும்.அந்த இடத்தில் மூன்று எண்ணிக்கை மூச்சடக்கிருக்கவும்.இது ஒரு முறை.இது போல் மூன்று முறைகள் அல்லது ஐந்து முறைகள் செய்யவும்.

பலன்கள்:

உடலில் நீரின் தன்மை சரியாக இருக்கும்.சிறுநீரகம், சிறுநீரகப்பை, நன்றாக இயங்கும்.சளி, ஆஸ்துமா, தலைவலி, மூக்கடைப்பு வராமல் வாழலாம்.கால் பாத வீக்கம், பாத எரிச்சல், நீரிழிவுவராமல் வாழலாம்.

வாத, பித்த, சிலேத்துமப் பயிற்சிகளை தினமும் காலைமாலை பயிலுங்கள். உடல் ஆரோக்கியம், உள் அமைதி கிடைக்கும். ஒவ்வொரு மனிதர்களும் இந்த பயிற்சியை முறையாக பயிலுங்கள். உங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால் தகுந்த யோகாசன வல்லுனரிடம் ஒரு முறை நேரடியாக பயிலுங்கள்.

யோகக் கலைமாமணி
பெ.கிருஷ்ணன் பாலாஜி M.A.(Yoga)
63699 40440
pathanjaliyogam@gmail.com

Tags:    

Similar News