செய்திகள்
விராட் கோலி, கேன் வில்லியம்சன்

நியூசி. ஸ்விங்கை இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் எதிர்கொள்வதை பார்க்க ஆர்வமாக இருக்கிறேன்- முன்னாள் பயிற்சியாளர்

Published On 2021-06-06 12:35 GMT   |   Update On 2021-06-06 12:35 GMT
ஐசிசி உலக சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் இரு அணிகளும் ஒன்றொன்று விட்டுக்கொடுக்காமல் விளையாடும் என்று நியூசிலாந்து முன்னாள் தலைமை பயிற்சியாளர் மைக் ஹெசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் வருகிற 18-ந்தேதி இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடக்கிறது. இங்கிலாந்து சீதோஷ்ணநிலை நியூசிலாந்து வீரர்களுக்கு சாதகமாக இருக்கும். காலையில் ஆடுகள் ஸ்விங் பந்து வீச்சிற்கு ஒத்துழைக்கும். டிரென்ட் போல்ட், டிம் சவுத்தி, கைல் ஜேமிசன் ஆகியோர் சிறப்பாக பந்தை ஸ்விங் செய்யக் கூடியவர்கள்.

இந்தியாவில் ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா, ரகானே போன்ற சிறந்த பேட்ஸ்மேன்கள் இருந்தாலும் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நியூசிலாந்து பந்து வீச்சை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பது கோடிக்கணக்கான ரசிகர்கள் கேள்வி.

இந்த நிலையில் நியூசிலாந்தின் ஸ்விங் பந்து வீச்சை இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் எவ்வாறு எதிர்கொள்கிறார் என்பதை பார்க்க ஆர்வமாக இருக்கிறேன் என நியூசிலாந்து அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் மைக் ஹெசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மைக் ஹெசன் கூறுகையில் ‘‘இந்தியா- நியூசிலாந்து அணிகள் பொதுவான இடத்தில் விளையாடினாலும், இரண்டு அணிகளிலும் அடுத்த இரண்டு வாரத்திற்கு காயம் ஏதும் ஏற்பாடாமல் இருந்து முழு அணிகளுடன் களம் இறங்கினால், நாம் சிறந்த போட்டியை காணலாம்.

நான் முக்கியமாக இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஸ்விங் பந்திற்கு எதிராக எப்படி விளையாடப் போகிறார்கள் என்பதை பார்க்க ஆர்வமாக இருக்கிறேன். சவுத்தாம்ப்டனில், புற்கள் நனைந்து பச்சையாக இருக்கும்போது, பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவாலாக இருக்கும். இந்திய பேட்ஸ்மேன்கள் விளையாடுவதை பொறுத்துதான் போட்டியின் ரிசல்ட் இருக்கும்.



விராட் கோலி, கேன் வில்லியம்சன் இருவரும் சிறந்த கேப்டன்கள். இருவரும் அவர்களுடைய வித்தியாசமான முறையில் கேப்டன் பணியை செய்து வருகிறார்கள். முக்கியமான நேரத்தில் கேன் வில்லியம்சன் நெருக்கடியை கட்டுப்படுத்தக் கூடியவர். ஆனால் விராட் கோலி எப்போதுமே அணி முன்னோக்கிச் சென்று கொண்டிருக்க வேண்டும் என நினைப்பவர்.

இருவரைடைய கேப்டன் பணியையும் பரிசோதிக்கக் கூடியது உலக சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம். நாளுக்கு நாள் ஆடுகளத்தின் தன்மை மாறிக் கொண்டே இருக்கும். யுக்தியை எப்படி இருவரும் கையாள்கிறார்கள் என்பதை பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும்’’ என்றார்.
Tags:    

Similar News