செய்திகள்
சரத்குமார்

எங்கள் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் கமல்ஹாசன்தான்- சரத்குமார்

Published On 2021-03-03 09:22 GMT   |   Update On 2021-03-03 09:22 GMT
எங்கள் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்தான் என்று சரத்குமார் கூறினார்.
தூத்துக்குடி:

தூத்துக்குடியில் சமத்துவ மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டத்தில் சரத்குமார் கூறியதாவது:

* மக்கள் நீதி மய்யத்துடன், சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி நேற்று இரவு உறுதி செய்யப்பட்டது.

* 'மாற்றத்திற்கான கூட்டணி' என்ற பெயரில் மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி கூட்டணி உறுதியானது.

* மக்கள் விரும்பும் கூட்டணியாக எங்கள் கூட்டணி இருக்கும். கொள்கை ரீதியாக ஒன்று சேர்கிறோம்.

* எங்கள் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்தான்.

* தமிழகத்தில் கோவில்பட்டி, ராதாபுரம் உள்ளிட்ட தென் மாவட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவோம்.

* தென்காசி, ஆலங்குளம் என எந்த தொகுதியில் வேண்டுமானாலும் நான் போட்டியிடுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News