ஆட்டோமொபைல்
டிரையம்ப் டிரைடென்ட் ப்ரோடோடைப்

டிரையம்ப் டிரைடென்ட் ப்ரோடோடைப் அறிமுகம்

Published On 2020-08-27 11:45 GMT   |   Update On 2020-08-27 11:45 GMT
டிரையம்ப் நிறுவனம் டிரைடென்ட் ப்ரோடோடைப் மாடலை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்து இருக்கிறது.

டிரையம்ப் மோட்டார்சைக்கிள் நிறுவனம் தனது டிரைடென்ட் ரோட்ஸ்டர் மாடலுக்கான ப்ரோடோடைப்பை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய டிரையம்ப் டிரைடென்ட் மாடல் 2021 வாக்கில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ரோட்ஸ்டர் மோட்டார்சைக்கிள் டிரையம்ப் மாடல்களில் விலை குறைந்த மாடலாக உருவாகி வருகிறது. இது ஸ்டிரீட் டிரிபில் 765 மாடலின் கீழ் நிலை நிறுத்தப்பட இருக்கிறது. தற்சமயம் வெள்ளை நிறம் கொண்டிருக்கும் ப்ரோடோடைப் கிட்டத்தட்ட உற்பத்திக்கு தயாரான வெர்ஷன் என கூறப்படுகிறது.



புகைப்படங்களின் படி புதிய மோட்டார்சைக்கிளில் வட்ட வடிவம் கொண்ட எல்இடி ஹெட்லேம்ப், பீஃபி டேன்க், அப்ஸ்வெப்ட் டெயில் மற்றும் எல்இடி லேம்ப் வழங்கப்படுகிறது. இத்துடன் புதிய இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்படலாம் என தெரிகிறது. பெரும்பாலும் இது முழுக்க டிஜிட்டலாக இருக்கும் என கூறப்படுகிறது.

டிரையம்ப் டிரைடென்ட் மாடலில் 675சிசி, லிக்விட் கூல்டு, 3 சிலிண்டர் மோட்டார் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பிஎஸ்6 விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கும். மேலும் இது 88 பிஹெச்பி பவர் மற்றும் 65 என்எம் டார்க் செயல்திறன் வழங்கும் என தெரிகிறது.
Tags:    

Similar News