செய்திகள்
விஜயபாஸ்கர்

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் 14 கல்வி நிறுவனங்கள் என்னென்ன?

Published On 2021-10-18 09:40 GMT   |   Update On 2021-10-18 09:40 GMT
விஜயபாஸ்கர் அமைச்சராக இருந்த காலத்தில் தனது பெயரிலும், மனைவி, மகள்கள் பெயரிலும் அதிகளவில் சொத்துக்கள் வாங்கி இருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்துள்ளனர்.
சென்னை:

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள், உறவினர்களுக்கு சொந்தமான இடங்கள் உள்பட 6 மாவட்டங்களில் 43 இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.

விஜயபாஸ்கர் மதர் தெரசா கல்வி அறக்கட்டளை ஒன்றை உருவாக்கி தனது சொந்த ஊரான இலுப்பூரில் பல்வேறு கல்வி நிறுவனங்களை நடத்தி வருவதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் முதல் தகவல் அறிக்கையில் தெரிவித்துள்ளனர். அவை என்னென்ன கல்வி நிறுவனங்கள் என்பது பற்றிய பட்டியலையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

1. மதர் தெரசா மெட்ரிக்குலேசன் பள்ளி,

2. மதர் தெரசா என்ஜினீயரிங் கல்லூரி,

3. மதர் தெரசா நர்சிங் கல்லூரி,

4. மதர் தெரசா பாலிடெக்னிக் கல்லூரி,

5. மதர் தெரசா கேட்டரிங் கல்லூரி,

6. மதர் தெரசா உடல் கல்வியியல் கல்லூரி,

7. மதர் தெரசா கலைக் கல்லூரி,

8. மதர் தெரசா ஆசிரியர் பயிற்சி கல்லூரி,

9. மதர் தெரசா வேளாண் கல்லூரி,

10. மதர் தெரசா பாராமெடிக்கல் கல்லூரி,

11. மதர் தெரசா யோகா மருத்துவக் கல்லூரி,

12. மதர் தெரசா சுகாதார அறிவியல் கல்லூரி,

13. மதர் தெரசா பார்மசி கல்லூரி,

14. மதர் தெரசா பிசியோதெரபி.

Tags:    

Similar News