ஆன்மிகம்
அன்பில் மாரியம்மன் கோவில் பங்குனி தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

அன்பில் மாரியம்மன் கோவில் பங்குனி தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2021-04-05 02:52 GMT   |   Update On 2021-04-05 02:52 GMT
லால்குடி அடுத்த அன்பில் மாரியம்மன் கோவிலில் பங்குனி மாதம் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 13-ந்தேதி அம்மன் திருத்தேரில் எழுந்தருளி தேரோட்டம் நடைபெறும்.
லால்குடி அடுத்த அன்பில் மாரியம்மன் கோவில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் சார்பு கோவிலாகும். இங்கு ஆண்டு தோறும் பங்குனி மாதம் தேர்த்திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு தேர்த்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதனையடுத்து ஒவ்வொரு நாளும் அம்மன் திருவீதி உலா நடைபெறும். வருகிற 13-ந்தேதி அம்மன் திருத்தேரில் எழுந்தருளி தேரோட்டம் நடைபெறும். இதனை அடுத்து 14-ந்தேதி விடையாற்றி விழா மற்றும் அம்மன் திருவீதி உலா நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையில் அன்பில் மாரியம்மன் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News