உள்ளூர் செய்திகள்
வீணாகும் குடிநீர்.

வீணாகும் குடிநீர்

Published On 2022-04-16 09:42 GMT   |   Update On 2022-04-16 09:42 GMT
தொண்டி கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு வருடமாக குடிநீர் வீணாக செல்கிறது.
தொண்டி 

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் கடைகள் அதிகம் உள்ள பகுதியான கிழக்குகடற்கரை சாலையில் ஒருவருடமாக குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி கொண்டிருக்கிறது. 

இந்த குடிநீர் பெரிய பள்ளிவாசல் செல்லும்வழி வரை கழிவுநீர் கால்வாய் போல் உள்ளது. இந்த முக்கிய சாலையில் ஏற்பட்ட குடிநீர்குழாய் உடைப்பு முன்பு தொண்டியில் செயல்பட்ட நேவி அலுவகத்திற்கு கொடுக்கப்பட்ட இணைப்பு எனவும், இந்தவழியாக கொடிப்பங்கு கிராமத்திற்கு செல்லும் இணைப்பு எனவும் கூறப்படுகிறது. 

கடந்த ஒரு ஆண்டுகளாக தார்ச்சாலையில் கொப்பளித்து குடிதண்ணீர் வீணாவதை அதிகாரிகள் கண்டுகொள்வதே இல்லை. இந்த குடிநீர் சுகாதாரக்கேடு விளைவிக்கும் வகையில் உள்ளது. உடைப்பு ஏற்பட்ட இடத்தை அதிகாரிகள் பார்வையிட்டு சரிசெய்ய வேண்டும் என்று வியாபாரிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
Tags:    

Similar News