ஆன்மிகம்
சென்னை வடபழனி முருகன் கோவில்

ஆடி கிருத்திகை: ஆன்லைனில் முருகனை தரிசிக்க வடபழனி கோவில் நிர்வாகம் ஏற்பாடு

Published On 2020-08-12 05:45 GMT   |   Update On 2020-08-12 05:45 GMT
வரங்கள் அனைத்தும் தரும் வடபழனி முருகப் பெருமானின் ஆடிக் கிருத்திகை பூஜையை, இல்லத்தில் இருந்தே தரிசிக்க,(இன்று மாலை 5 மணியளவில்) ஆலய நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
ஆடிக்கிருத்திகையில் ஆன்லைனில் அழகன் முருகனின் அபிஷேக ஆராதனையை, நேரலையில் வீட்டிலிருந்தபடியே தரிசியுங்கள். வரங்கள் அனைத்தும் தரும் வடபழனி முருகப் பெருமானின் ஆடிக் கிருத்திகை பூஜையை, இல்லத்தில் இருந்தே தரிசிக்க, ஆலய நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

பொதுவாகவே, ஆடிக் கிருத்திகை தினத்தன்று அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்பான வழிபாடுகள் நடத்தப்படும். இந்தநாளில், விரதம் இருந்து முருக தரிசனம் மேற்கொள்வார்கள் பக்தர்கள்.

சென்னை வடபழனி அருள்மிகு வடபழனி ஆண்டவர் திருக்கோவிலின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான ஆடி கிருத்திகையை முன்னிட்டு, வடபழனி ஆண்டவர் உற்சவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இன்று 12.8.2020 ஆடிக்கிருத்திகை நன்னாள். வழக்கம்போலவே வடபழனி ஆண்டவர் கோவிலில் உள்ள உற்சவ மூர்த்திக்கு விசேஷ அபிஷேகங்களும் ஆராதனைகளும் நடைபெறுகிறது. இதனை, ஆன்லைனில் நேரடியாக ஒளிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளது ஆலய நிர்வாகம். .

பக்தர்கள் https://www.youtube.com/channel/UCntBdqxaQ9v9Qr7saUmXq0g என்ற YouTube channel மூலம், 12.08.2020 புதன்கிழமை இன்று மாலை 5 மணியளவில் நேரலை ஒளிபரப்பு மூலம் தரிசித்து, அருள்மிகு வடபழனி ஆண்டவரின் அருளைப் பெறுங்கள்.
Tags:    

Similar News