உள்ளூர் செய்திகள்
அங்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை மாவட்டத்தில் 119 மையங்களில் நாளை பிளஸ்-2 தேர்வு தொடக்கம்

Published On 2022-05-04 11:12 GMT   |   Update On 2022-05-04 11:12 GMT
37 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்
கோவை:

கொரோனா காரணமாக கடந்த ஆண்டு பள்ளி மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் நடைபெறாத நிலையில் நடப்பு கல்வியாண்டில் பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி, பிளஸ்-2 மாணவர்களுக்கான தேர்வு நாளை தொடங்கி வரும் 28-ந் தேதி வரை நடக்கிறது. அதன்படி நாளை மொழிப்பாடத்திற்கான தேர்வு நடக்கிறது.

 இந்த தேர்வினை கோவை மாவட்டத்தை சேர்ந்த அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என 365 பள்ளிகளை சேர்ந்த 35 ஆயிரத்து 33 மாணவர்களும் மற்றும் தனித்தேர்வர்கள் 2 ஆயிரத்து 47 பேரும் என மொத்தம் 37 ஆயிரத்து 80 பேர் எழுதவுள்ளனர்.

 மாவட்டம் முழுவதும் மொத்தம் 119 மையங்களில் தேர்வு நடக்கிறது. தேர்வு பணியில் 3,200 பேர் ஈடுபடுகின்றனர். தேர்வுகளில் முறைகேடு களை தடுக்கும் வகையில் கண்காணிப்பு பணியில் 250 பறக்கும் படை அதிகாரிகள் ஈடுபடுகின்றனர். தேர்வுக்கான வினாத்தாள் கட்டுகள் நோடல் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. 

அங்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பிளஸ்-1 வகுப்பிற்கான மேல்நிலை பொதுத்தேர்வை 199 மையங்களில் 37 ஆயிரத்து 33 மாணவர்கள் பள்ளிகள் மூலமாகவும், 2 ஆயிரத்து 90 மாணவர்கள் தனித் தேர்வர்களாகவும் மொத்தம் 39 ஆயிரத்து 123 பேர் எழுதுகின்றனர்.

 வருகிற 6-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் நடக்கிறது. இந்ததேர்வை பள்ளியின் மூலமாக 149 மையங்களில் 41 ஆயிரத்து 811 மாணவர்களும், தனித்தேர்வர்கள் 6 மையங்களில் 2 ஆயிரத்து 917 மானவர்களும் என மொத்தம் 44 ஆயிரத்து 728 பேர் தேர்வை எழுதவுள்ள னர். தேர்வு பணியில் 3,800 பேர் ஈடுபடவுள்ளனர். மேலும், தேர்வு மையங்களில் மின்தடை ஏற்படாமல் இருக்க தேவையான நடவடிக்கையை மின் வாரியம் மூலம் எடுக்கப் பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட முதன் மை கல்வி அலுவலர் கீதா கூறியதாவது:-
‘பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வு மையங்களில் மாணவர்களுக்கு குடி நீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பிளஸ்-2 தேர்வு பணியில் 3,200 பேர் ஈடுபடுகின்றனர். எவ்வித புகார்களின்றி தேர்வுகளை சுமூகமாக நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர்வு அறைகளில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப் பிடிக்கவும், மாணவர்கள் முககவசம் அணிந்து தேர்வுக்கு வரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். 
Tags:    

Similar News