செய்திகள்
பா.ஜனதா

உத்தர பிரதேசம், குஜராத் மாநில சட்டசபை இடைத்தேர்தலில் பா.ஜனதா ஆதிக்கம்

Published On 2020-11-10 16:54 GMT   |   Update On 2020-11-10 16:54 GMT
உத்தர பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற 7 தொகுதிக்கான இடைத்தேர்தலில் 6 இடங்களில் பா.ஜனதா வெற்றி பெற்றது.
பீகார் சட்டசபை தேர்தலுடன் மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில காலியாக இருந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.

உத்தர பிரதேசத்தில் 8 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் 7 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெற்றது. ஒரு இடத்தில் பிஎஸ்பி வெற்றி பெற்றது. பிஎஸ்பி வேட்பாளர் பிரசாந்த் யாதவ் காலமானதால் அவரது மகன் லக்கி யாதவ் போட்டியிட்டார். லக்கி யாதவ் சுயேட்சை வேட்பாளரை 4632 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

குஜராத் மாநிலத்தில் 8 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் 8 தொகுதிகளிலும் பா.ஜனதா வெற்றி பெற்றது.
Tags:    

Similar News