செய்திகள்

நியூசிலாந்து மசூதிகளில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு- 9 இந்தியர்கள் மாயம்

Published On 2019-03-16 03:22 GMT   |   Update On 2019-03-16 03:22 GMT
நியூசிலாந்தின் மசூதிகளில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தி பொதுமக்களை கொன்று குவித்தனர். இச்சம்பவத்தின் போது 9 இந்தியர்கள் மாயமாகியுள்ளனர் என தெரிய வந்துள்ளது. #MosqueShooting #NewZealandShooting #IndiansMissing
கிறிஸ்ட்சர்ச்:

நியூசிலாந்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள இரண்டு மசூதிகளில் நேற்று தொழுகை நடைபெற்றபோது, மர்ம நபர்கள் திடீரென புகுந்து துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதில், 49 பேர் பலியாகினர். மேலும் பலர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.



இந்த தாக்குதலுக்கு நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆடர்ன் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும் இச்சம்பவம்  தொடர்பாக 4 பேரை  போலீசார் கைது செய்தனர். நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தடுப்பு படை போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

துப்பாக்கி சூடு குற்றவாளி, "ப்ரெண்டான் டாரன்ட்" என்று பெயரிடப்பட்ட ஒரு ஆஸ்திரேலியராக ட்விட்டரில் தன்னை அடையாளம் காட்டி உள்ளான்.

இந்நிலையில் இந்திய தூதர் சஞ்சீவ் கோலி தனது டுவிட்டர் பக்கத்தில், ‘சம்பவம் தொடர்பாக பல்வேறு இடங்களில் இருந்து  கிடைத்த தகவல்களின் படி, இந்தியா மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 9 பேர் மாயமானதாக தெரிய வந்துள்ளது. இது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனது. மனிதர்களுக்கு எதிராக மாபெரும் குற்றம் அரங்கேறியுள்ளது. நாங்கள் அவர்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து பிரார்த்திக்கிறோம்’ என பதிவிட்டுள்ளார்.   #MosqueShooting #NewZealandShooting #IndiansMissing

Tags:    

Similar News