ஆட்டோமொபைல்
ஹூண்டாய் ஐ20

புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 ஸ்பை படங்கள் வெளியீடு

Published On 2020-09-01 12:01 GMT   |   Update On 2020-09-01 12:01 GMT
ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய தலைமுறை ஐ20 மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
ஹூண்டாய் நிறுவனத்தின் மூன்றாம் தலைமுறை ஐ20 மாடல் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய ஐ20 மாடல் மூன்று வித என்ஜின் ஆப்ஷன்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

முன்னதாக இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் காட்சிப்படுத்தப்பட்ட நிலையில், புதிய ஐ20 மாடலின் ஸ்பை படங்கள் பலமுறை இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன. அந்த வரிசையில், தற்சமயம் புதிய ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.

ஸ்பை படங்களின் படி புதிய ஹூண்டாய் ஐ20 மாடல் காற்று மாசு அளவை கணக்கிடும் உபகரணம் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த கார் சில்வர் நிறம், ஸ்டீல் வீல்கள், கன்வென்ஷனல் ஆன்டெனா, ரியர் வாஷர், வைப்பர், பாடி நிற டோர் ஹேன்டிள் மற்றும் ஒஆர்விஎம்களை கொண்டிருக்கின்றன.



இதன் தோற்றம் பார்க்க சர்வதேச மாடலில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது. புதிய தலைமுறை ஐ20 மாடல் முற்றிலும் புதிய வடிவமைப்பு, புதிய கேஸ்கேடிங் கிரில், மெல்லிய ஹெட்லேம்ப்கள், ராப்-அரவுண்ட் ஸ்ப்லிட் டெயில் லேம்ப்கள், டூயல் டோன் அலாய் வீல் வடிவமைப்பு உள்ளிட்டவை காருக்கு பிரீமியம் தோற்றத்தை வழங்குகிறது. 

புதிய ஹூண்டாய் ஐ20 மாடலில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.2 லிட்டர் பெட்ரோல் யூனிட் மற்றும் 1.5 லிட்டர் ஆயில் பர்னர் யூனிட் உள்ளிட்ட என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. 

இவற்றுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ், சிவிடி ஆப்ஷன், டார்க் கன்வெர்ட்டர் யூனிட் மற்றும் 6 ஸ்பீடு ஐஎம்பி மற்றும் 7 ஸ்பீடு டிசிடி டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம் என தெரிகிறது.
Tags:    

Similar News