செய்திகள்
வைரல் வீடியோ ஸ்கிரீன்ஷாட்

பிரான்ஸ் அதிபர் மீது முட்டை தாக்குதல் நடத்தப்பட்டதாக வைரலாகும் வீடியோ

Published On 2020-10-29 05:10 GMT   |   Update On 2020-10-30 20:31 GMT
இஸ்லாமியர்கள் பற்றிய சர்ச்சை கருத்து தெரிவித்த விவகாரத்தில் பிரான்ஸ் அதிபர் மீது முட்டை வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறி வீடியோ வைரலாகி வருகிறது.


முகமதி நபியின் கேலி சித்திரத்தை வெளியிட்ட பத்திரிகைக்கு ஆதரவு தெரிவித்தது மற்றும் இஸ்லாமிய மதத்தை இழிவுப்படுத்தி பேசிய விவகாரத்தில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரான் சர்ச்சையில் சிக்கியுள்ளார். 

இந்நிலையில், மேக்ரான் சிலருடன் பேசி கொண்டிருக்கும் போது அவரது முகத்தில் முட்டை வீசி தாக்கப்பட்ட காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இஸ்லாமிய சமுதாயத்திற்கு எதிரான போக்கு காரணமாக மேக்ரானுக்கு இந்த நிலை ஏற்பட்டதாக வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.



வைரல் வீடியோவை ஆய்வு செய்ததில், அது மார்ச் 2017 ஆண்டு எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அதிபர் தேர்தலுக்கு முன் மேக்ரான் வேட்பாளராக இருந்த போது நடைபெற்றது. அந்த வகையில் வைரல் வீடியோவுக்கும் தற்போதைய சர்ச்சைக்கும் துளியும் தொடர்பில்லை என உறுதியாகிவிட்டது.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
Tags:    

Similar News