ஆன்மிகம்
மீனாட்சி அம்மன்

மீனாட்சி அம்மன் சிவ பூஜை அலங்காரத்தில் காட்சி

Published On 2021-10-15 04:48 GMT   |   Update On 2021-10-15 04:48 GMT
நவராத்திரி விழாவில் சரஸ்வதி பூஜை தினமான நேற்று, மீனாட்சி அம்மன் சிவபூஜை அலங்காரத்தில் காட்சி அளித்தார். இதையொட்டி அம்மனுக்கு மாலையில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் மீனாட்சி அம்மனுக்கு என்று தனியாக நடைபெறும் ஆடி முளைக்கொட்டு, நவராத்திரி விழா, ஐப்பசி கோலாட்ட உற்சவ விழா போன்ற திருவிழாக்கள் சிறப்பு வாய்ந்தவை.

இந்த ஆண்டுக்கான நவராத்திரி உற்சவ விழா கடந்த 7-ந் தேதி தொடங்கி நாளை (15-ந் தேதி) வரை நடக்கிறது.

விழா நாட்களில் தினமும் மாலை 6 மணி இரவு 8.30 மணி வரை மூலவர் மீனாட்சி அம்மனுக்கு திரை போட்டு அபிஷேகம், அலங்காரம் கல்பபூஜை மற்றும் சகஸ்ரநாம பூஜை போன்ற விஷேச பூஜைகள் நடைபெற்று வருகிறது.

நவராத்திரி திருவிழாவையொட்டி அம்மன் சன்னதி 2-ம் பிரகாரத்தில் உள்ள கொலு மண்டபத்தில் உற்சவர் மீனாட்சி அம்மன் எழுந்தருளி ஒவ்வொரு நாளும் வெவ்வேறு அலங்காரத்தில் காட்சி தருகிறார். அதன்படி நேற்று மகிஷாசூரமர்த்தினி அலங்காரத்தில் அம்மன் காட்சி அளித்தார். அதனை நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.

நவராத்திரி விழாவில் சரஸ்வதி பூஜை தினமான நேற்று, மீனாட்சி அம்மன் சிவபூஜை அலங்காரத்தில் காட்சி அளித்தார். இதையொட்டி அம்மனுக்கு மாலையில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

இன்று (15-ந் தேதி) விஜயதசமி தினத்தன்று சடையலம்புதல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது. அதையொட்டி பொற்றாமரை குளத்தில் உள்ள மண்டபத்தில் அம்மன் எழுந்தருளி சடையலம்புதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதன் பின்னர் தீபாராதனையுடன் நவராத்திரி விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் செல்லத்துரை மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.
Tags:    

Similar News