ஆன்மிகம்
ஹஸ்ரத் பாவா காசிம் வலியுல்லா ஆண்டு பெருவிழா

ஹஸ்ரத் பாவா காசிம் வலியுல்லா ஆண்டு பெருவிழா

Published On 2021-02-16 03:46 GMT   |   Update On 2021-02-16 03:46 GMT
நாகர்கோவில் கோட்டார் பாவா காசிம் வலியுல்லா பள்ளிவாசலில் கோமான் ஹஸ்ரத் பாவா காசிம் வலியுல்லா ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நாகர்கோவில் கோட்டார் பாவா காசிம் வலியுல்லா பள்ளிவாசலில் கோமான் ஹஸ்ரத் பாவா காசிம் வலியுல்லா ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கொடி நகர வீதிகளில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. அதன்பிறகு கோட்டாறு இளங்கடை முஸ்லிம் சமுதாய டிரஸ்ட் தலைவர் ஹாஜி பாவலர் சித்திக் பிறை கொடியை ஏற்றி வைத்தார். இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த விழா 25-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி தினமும் மத குருமார்கள் மவுலூது ஓதுவார்கள். 24-ந்தேதி பிறைக்கொடியுடன் யானை ஊர்வலம் நடைபெறுகிறது. 25-ந்தேதி காலை 8 மணிக்கு வீடுகள் தோறும் நேர்ச்சை வழங்கப்பட உள்ளது.
Tags:    

Similar News