செய்திகள்
அஜித்பவார்

மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும்: அஜித்பவார் வலியுறுத்தல்

Published On 2021-02-19 01:42 GMT   |   Update On 2021-02-19 01:42 GMT
மகாராஷ்டிரா துணை முதல்-மந்திரி அஜித்பவார் மத்திய அரசு உடனடியாக பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
மும்பை :

மகாராஷ்டிராவில் ஒரு சில இடங்களில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ தொட்டுள்ளது. இதேபோல தலைநகர் மும்பையிலும் இதுவரை இல்லாத அளவில் பெட்ரோல் டீசல், விலை உயர்ந்து இருக்கிறது. நேற்று நகரில் பெட்ரோல் ரூ.96.32-க்கும், டீசல் ரூ.87.32-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்தநிலையில் துணை முதல்-மந்திரி அஜித்பவார் மத்திய அரசு உடனடியாக பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "மத்திய அரசு 1-ந் தேதி பட்ஜெட் தாக்கல் செய்தது. அதன்பிறகு இரும்பு, சிமெண்ட், பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலை உயர்ந்து உள்ளது. இதில் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு விலையை குறைக்க வேண்டும். தற்போது சாதாரண மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். மாநில பட்ஜெட்டில் உள்ளதை தற்போது கூற முடியாது. முதல்-மந்திரி, மந்திரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு தான் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டியவை குறித்து முடிவு எடுக்கப்படும்" என்றார்.

மேலும் சபாநாயகர் தேர்தல் குறித்து கேட்ட போது, இது தொடர்பாக மந்திரிசபை ஆலோசனை நடத்தி கவர்னருக்கு பதில் அளிக்கும் என கூறினார். இதேபோல பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ள 12 எம்.எல்.சி.க்களின் பெயரை கவா்னர் அறிவிக்க வேண்டும் எனவும் அஜித்பவார் தெரிவித்தார்.
Tags:    

Similar News