செய்திகள்
கோப்புப்படம்

திண்டுக்கல்லில் கல்லூரி மாணவர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம்

Published On 2021-09-17 11:27 GMT   |   Update On 2021-09-17 11:27 GMT
திண்டுக்கல்லில் கல்வி கட்டணத்தை முழுமையாக செலுத்த கட்டாயப்படுத்திய நிர்வாகத்தை கண்டித்து மாணவ-மாணவிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்:

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் கடந்த மாதம் முதல் மேல்நிலை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டன. சுழற்சி முறையில் மாணவ-மாணவிகளை வரவழைத்து பாடம் கற்பிக்கவேண்டும் என அறிவுறுத்தி உள்ள தமிழக அரசு விருப்பம் இல்லாத மாணவர்களை கட்டாயப்படுத்த கூடாது என தெரிவித்துள்ளது.

மேலும் கல்வி கட்டணங்களை வசூலிப்பதில் கெடுபிடி காட்டக்கூடாது என்றும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் திண்டுக்கல்-கரூர் சாலையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரி மாணவ-மாணவிகள் இன்று வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வாசல் முன்பாக தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களிடம் கல்வி கட்டணத்தை நிர்வாகம் முழுமையாக கேட்பதாகவும், இதுகுறித்து அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் தெரிவித்தனர். இதனால் கல்லூரி முன்பு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News