தொழில்நுட்பம்
சாம்சங்

அடுத்த வாரம் இந்தியா வரும் இரு சாம்சங் ஸ்மார்ட்போன்கள்

Published On 2020-05-27 07:17 GMT   |   Update On 2020-05-27 07:17 GMT
சாம்சங் நிறுவனத்தின் இரண்டு கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள் அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.



இந்திய சந்தையில் சாம்சங் நிறுவனம் இரண்டு கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கேலக்ஸி எம்01 மற்றும் கேலக்ஸி எம்11 என்ற பெயரில் இரு ஸ்மார்ட்போன் மாடல்கள் ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் அறிமுகமாக இருப்பதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் இரு ஸ்மார்ட்போன் மாடல்களும் இந்தியாவில் அடுத்த வாரத்தில் அறிமுகமாகி இவை ரூ. 15 ஆயிரம் பட்ஜெட்டில் விற்பனை செய்யப்படலாம் என தெரிகிறது. இவை சாம்சங்கின் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் விற்பனை மையங்களில் விற்பனை செய்யப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் இரு ஸ்மார்ட்போன்களி சிறப்பம்சங்களும் தெரியவந்துள்ளது.



அதன்படி கேலக்ஸி எம்01 ஸ்மார்ட்போனில் 5.71 இன்ச் HD+ TFT 720×1560 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, வாட்டர் டிராப் நாட்ச், குவால்காம் ஸ்னாப்டிராகன் 439 பிராசஸர், 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இத்துடன் 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் கேமரா, 5 எம்பி செல்ஃபி சென்சார் வழங்கப்படுகிறது. இத்துடன் 4000 எம்ஏஹெச் பேட்டரி, 5 வாட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.

கேலக்ஸி எம்11 ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் HD+ TFT 720×1560 பிக்சல் டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 450 பிராசஸர், 3 ஜிபி / 4 ஜிபி ரேம், 32 ஜிபி / 64 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது. இத்துடன் 13 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி டெப்த் சென்சார் மற்றும் 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. 

இந்த ஸ்மார்ட்போனை சக்தியூட்ட 5000 எம்ஏஹெச் பேட்டரி, 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. இதுதவிர ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சாரும் வழங்கப்படும் என தெரிகிறது.
Tags:    

Similar News