செய்திகள்
அசைவற்ற நிலையில் கிடந்த வீரருக்கு சிகிச்சை அளித்தபோது, சோகத்தில் நிற்கும் சக வீரர்கள்

மைதானத்தில் திடீரென நிலைகுலைந்து விழுந்த டென்மார்க் வீரர்- யூரோ கோப்பை போட்டி நிறுத்தம்

Published On 2021-06-12 17:40 GMT   |   Update On 2021-06-12 17:54 GMT
கிறிஸ்டியன் எரிக்சன் உடல்நலம் சீரடைய வேண்டி சக வீரர்களும், ரசிகர்களும் பிரார்த்தனை செய்தனர்.
கோபன்ஹேகன்:

ஐரோப்பிய கோப்பை (யூரோ கோப்பை) கால்பந்து போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.  இப்போட்டியில் மொத்தம் 24 நாடுகள் பங்கேற்றுள்ளன. இந்த நாடுகளின் அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதுகின்றன. அவ்வகையில் கோபன்ஹேகனில் இன்று நடந்த ஆட்டத்தில் டென்மார்க்-பின்லாந்து அணிகள் விளையாடின.

முதல் பாதி ஆட்டம் நிறைவடைய சில நிமிடங்கள் இருந்தபோது டென்மார்க் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியன் எரிக்சன் திடீரென மைதானத்தில் நிலைகுலைந்து விழுந்து மூர்ச்சையானார். அவர் அசைவற்று கிடந்ததால் உடனடியாக போட்டி நிறுத்தப்பட்டது. 



மருத்துவக் குழுவினர் மைதானத்திற்குள் வந்து அவருக்கு சிகிச்சை அளித்தனர். எனினும் அவருக்கு நினைவு திரும்பவில்லை. இதனையடுத்து அவர் ஸ்டிரெச்சரில் ஏற்றப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். 

வீரர்கள் அனைவரும் சோகத்தில் ஆழ்ந்தனர். கிறிஸ்டியன் எரிக்சன் உடல்நலம் சீரடைய வேண்டி சக வீரர்களும்,  ரசிகர்களும் பிரார்த்தனை செய்தனர். 
Tags:    

Similar News