இந்தியா
சஞ்சய் ராவத்

காங்கிரஸ் அல்லாத கூட்டணி பற்றி மம்தா பானர்ஜி யோசிக்கிறார்: சிவசேனா கருத்து

Published On 2021-12-06 02:57 GMT   |   Update On 2021-12-06 02:57 GMT
கடந்த சனிக்கிழமை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, பா.ஜனதாவுக்கு எதிரான போராட்டத்தை வழிநடத்த தவறியதால் காங்கிரசுக்கு மாற்று கூட்டணி உருவாக்க போவதாக கூறியுள்ளது.
மும்பை :

மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கடந்த சில நாட்களுக்கு முன் மும்பைக்கு 3 நாட்கள் சுற்றுப்பயணம் வந்தார். அப்போது அவர் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து பேசினார். மேலும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசும்போது, காங்கிரசை விமர்சித்தார். இதேபோல அவரது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பத்திரிகையும் காங்கிரசை தொடர்ந்து விமர்சித்து வருகிறது.

கடந்த சனிக்கிழமை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, பா.ஜனதாவுக்கு எதிரான போராட்டத்தை வழிநடத்த தவறியதால் காங்கிரசுக்கு மாற்று கூட்டணி உருவாக்க போவதாக கூறியுள்ளது.

இந்தநிலையில், சிவசேனா கட்சியின் சாம்னா பத்திரிகையில் சஞ்சய் ராவத் எம்.பி., "மம்தா பானர்ஜி காங்கிரஸ் அல்லாத கூட்டணி பற்றி யோசித்து வருகிறார். மராட்டியத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் வலுவாக இருப்பதால் இங்கு கால் தடம்பதிக்க போவதில்லை என மம்தா பானர்ஜி சமீபத்தில் ஆதித்ய தாக்கரேவிடம் கூறியுள்ளார்.

இதேபோல மேற்கு வங்காளம், மராட்டியம் இடையேயான சுற்றுலா, கலாசார உறவு குறித்து பேசி உள்ளார். மேலும் மும்பையில் பெங்கால் பவன் கட்டவும் மம்தா பானர்ஜி இடம் கேட்டு இருக்கிறார். கொல்கத்தாவில் நடைபெற உள்ள திரைப்பட விழாவுக்கும் அவர் ஆதித்ய தாக்கரேயை அழைத்துள்ளார்" என கூறியுள்ளார்.
Tags:    

Similar News