ஆன்மிகம்
சிவன்

இந்த வார விசேஷங்கள் 23.7.2019 முதல் 29.7.2019 வரை

Published On 2019-07-23 04:48 GMT   |   Update On 2019-07-23 04:48 GMT
ஜூலை மாதம் 23-ம் தேதியில் இருந்து ஜூலை மாதம் 29-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
23-ந்தேதி (செவ்வாய்) :

* குரங்கணி முத்துமாலையம்மன் கோவிலில் நாராயண சுவாமி தீர்த்தம்.
* சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.
* நத்தம் மாரியம்மன் பூந்தேரில் பவனி வருதல்.
* திருப்பதி ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.
* மேல்நோக்கு நாள்.

24-ந்தேதி (புதன்) :

* ஸ்ரீரங்கம் நம்பெருமாள் புறப்பாடு கண்டருளல்.
* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சன சேவை.
* தேவகோட்டை ரெங்கநாதர் பவனி வருதல்.
* சமநோக்கு நாள்.

25-ந்தேதி (வியாழன்) :


* திருநெல்வேலி, மேல்மருவத்தூர், திருவானைக்கா, காளையார்கோவில் ஆகிய தலங்களில் ஆடிப்பூர உற்சவம் தொடக்கம்.
* ராமேஸ்வரம் ராமநாதசுவாமி, நாகப்பட்டினம் நீலாயதாட்சி அம்மன், திருவாடானை சிநேக வள்ளி அம்மன், நயினார் கோவில் நாகநாதசுவாமி ஆகிய தலங்களில் உற்சவம் ஆரம்பம்.
* திருத்தணி முருகப்பெருமான் திருக்குளம் வலம் வருதல்.
* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ராமருக்கு திருமஞ்சன சேவை.
* சமநோக்கு நாள்.

26-ந்தேதி (வெள்ளி) :

* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் தங்க காமதேனு வாகனத்தில் வீதி உலா.
* நாகப்பட்டினம் நீலாயதாட்சி அம்மன், மகாலட்சுமி அலங்காரத்தில் பெண் பூத வாகனத்தில் பவனி.
* நயினார்கோவில் சவுந்தர நாயகி, பல்லாங்குழி ஆடி வரும் திருக்கோலக் காட்சி, இரவு வெள்ளி அன்ன வாகனத்தில் திருவீதி உலா.
* திருத்தணி முருகப்பெருமான் பரணி உற்சவம்.
* படைவீடு ரேணுகாம்பாள் புறப்பாடு கண்டருளல்.
* கீழ்நோக்கு நாள்.

27-ந்தேதி (சனி) :

* கார்த்திகை விரதம்.
* ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர உற்சவம் ஆரம்பம்.
* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் காலை தங்கப்பல்லக்கிலும், இரவு தங்க கேடயத்திலும் பவனி.
* நாகப்பட்டினம் நீலாயதாட்சி அம்மன் காலை பெரிய அம்ச வாகனத்திலும், இரவு பாலவெள்ளி கிளி வாகனத்திலும் வீதி உலா.
* கீழ்நோக்கு நாள்.

28-ந்தேதி (ஞாயிறு) :


* முகூர்த்த நாள்.
* சர்வ ஏகாதசி.
* திருநெல்வேலி காந்திமதி அம்மன் ரிஷப வாகனத்தில் புறப்பாடு கண்டருளல்.
* ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சந்திர பிரபையிலும், ரெங்கமன்னார் சிம்ம வாகனத்திலும் திருவீதி உலா.
* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் காலை தங்கப் பல்லக்கில் புறப்பாடு.
நயினார்கோவில் சவுந்தரநாயகி அம்மன் ஆடிவரும் திருக்கோலக் காட்சி. இரவு கமல வாகனத்தில் பவனி.
* திருத்தணி முருகப்பெருமான் கோவிலில் தெப்போற்சவம்.
* மன்னார்குடி செங்கமலத் தாயார் சந்திர பிரபையில் புறப்பாடு.
* மேல்நோக்கு நாள்.

29-ந்தேதி (திங்கள்) :

* பிரதோஷம்.
* ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் தந்த பரங்கி நாற்காலியிலும், ரெங்கமன்னார் அனுமன் வாகனத்திலும் பவனி.
* சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் உற்சவம் ஆரம்பம்.
* திருவாடானை சிநேகவள்ளி அம்மன் கிளி வாகனத்தில் புறப்பாடு.
* நயினார்கோவில் சவுந்தரநாயகி அம்மன், வேணுகான கிருஷ்ணமூர்த்தி அலங்காரம், இரவு வெள்ளி யானை வாகனத்தில் வீதி உலா.
* மன்னார்குடி செங்கமலத் தாயார் அம்ச வாகனத்தில் பவனி.
* சமநோக்கு நாள்.

Tags:    

Similar News